செங்கனல்

செங்கனல்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். கையாட்களை நிரப்பும் சதி | பேரா.வீ.அரசு

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பேசிய காணொளி. …

காவி கும்பலின் இந்திய வரலாற்றைத் திரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்

ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட காவி பாசிச சக்திகள் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய வரலாற்றைக் கட்டமைக்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். இந்திய வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று கூறப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தை, வேதகால நாகரீகம் என நிறுவுவதற்கும், வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி நதி இந்தப் பகுதியில்தான் பாய்ந்தது எனக் காட்டுவதற்காகவும், இந்தியத் …

ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு!

ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு! பூமரத்துக்குழி வனத்துறை வசூல் கேட்டை இழுத்து மூடு! குந்துக்கோட்டை கொண்டை ஊசி வளைவு சாலையை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொடு! என்ற முழக்கத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் 03.03.2025 திங்கள் காலை 11 மணிக்கு, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சட்ட ஒழுங்கை காரணம்…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!
அரங்க கூட்டம்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பேராசிரியர் ப. சிவக்குமார் மற்றும் பேராசிரியர் வீ. அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பேராசிரியர்…

பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு!

    பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு! என்ற முழக்கத்தின் கீழ் 25.2.2025 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாற்றிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின்…

அமெரிக்க உக்ரைன் கனிமவள ஒப்பந்தம்
ஏகாதிபத்தியங்களின் தயவில் இறையாண்மையை பாதுகாக்க முடியுமா?

“உக்ரைன் இந்தப் போரில் வெல்வதன் மூலம் தனது இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது எல்லைகளை ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். அதற்கு அமெரிக்கா எல்லா உதவிகளையும் உக்ரைனுக்கு வழங்கும்” – சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கிய காலத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அந்தப் போரில்…

கும்பமேளா படுகொலைகள்: காவி பாசிஸ்டுகளின் அரசியல் லாபத்துக்காகப் பலியிடப்படும் பொதுமக்கள்

ஒன்றிய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து நடத்தி வரும் மகா கும்பமேளா இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் குவிந்து வருகிறார்கள். ஏற்கெனவே பிரயாக்ராஜ் நகரில் ஒரு முறையும், தில்லி இரயில் நிலையத்தில் ஒரு …

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!

  தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக ஆதரவாளர்களைத் துணைவேந்தர்களாக நியமிப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களில், இந்துத்துவா கருத்தியலை திணிக்கும் வேலையை…

கும்பமேளா குளியல்:
பாவம் தீர்க்கவா? நோய் தொற்றவா?

மாட்டுமூத்திரம் குடித்தால் காய்ச்சல் குணமாகும், மஞ்சள்நீர் தெளித்தால் கொரோனா வராது போன்ற நிருபிக்கப்படாத விசயங்களை மதம், ஆன்மீகம் மற்றும் தேசபற்று ஆகியவற்றோடு கலந்து தனது இந்துத்துவா பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பிவருகிறது பாஜக-ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல். அந்த வரிசையில் தற்போது உத்திரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் இல் நடந்து வரும் மகாகும்பமேளாவை ஏறத்தாழ இந்தியாவினுடைய அடையாளமாக மாற்றும் அளவிற்குப் பிரச்சாரம் …