கரூர் 42 பேர் படுகொலை: விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைது செய் !
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 கோடி இழப்பீடு பெற்றுக் கொடு! என்கிற தலைப்பில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 01-10-2025 அன்று காலை 11 மணிக்கு புரட்சிகர மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் சிவா தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் கல்வி மற்றும் பொருளாதார பிரிவின் மாநில துணை செயலாளர் தோழர் சிவஞானம், முற்போக்கு இளைஞர் முன்னணி, தோழர் பழனி, சுதந்திர வளர்ச்சிக்கான விவசாய சங்கம் தோழர் முனுசாமி, CPI(ML) லிபரேஷன் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ், புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாவட்ட குழு உறுப்பினர், தோழர் ராமலிங்கம் நன்றி உரை ஆற்றினார்.
- தமிழக அரசே! 40 பேரின் சாவுக்கு காரணமான தவெக தலைவர் விஜய்யை பிணையில் வெளிவர முடியாத கொலை வழக்கில் கைது செய்!
- தவெக-விடமிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 கோடி பெற்று இழப்பீடு வழங்கு!
உழைக்கும் மக்களே! - உழைக்கும் மக்களின் உயிரை கிள்ளு கீரையாக கருதும் அரசியல் பொறுக்கிகளின் கூட்டங்களைப் புறக்கணிப்போம்!
தகவல்
தோழர் சிவா
தருமபுரி மாவட்ட செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
97901 38614