கரூரில் தவெக நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் மரணம்!! விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடை!!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி

28-09-2025

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நேற்று (27-09-2025) கரூரில் தவெக விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் அகால மரணம் அடைந்திருப்பது நெஞ்சை பதறவைக்கிறது. தமது உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

துளி அளவுக்கு சமூக அக்கறை அற்றவர்கள் கூட, எந்த கொள்கையும் இல்லாதவர்கள் கூட அரசியல் மாற்று என்று கூறிக்கொண்டு அரசியல் செய்து மக்களை நம்பவைத்து கழுத்தறுக்க முடியும், மக்களை அலட்சியப்படுத்தி கொலை செய்ய முடியும் என்ற அளவிற்கு அரசியல் தரம் தாழ்ந்துகொண்டிருக்கிறது.

கூட்டம் நடத்தும் இடத்திற்கு தகுந்தவாறு எவ்வளவு பேர் வர வேண்டும். எத்தனை மணிக்கு வரவேண்டும். அவர்களின் உணவு, குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை எல்லாம் திட்டமிட்டுதான் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் இது குறித்து அக்கறை இல்லாமல் தனக்கு விருப்பபட்ட நேரத்திற்கு கூட்டத்திற்கு வருவது என்ன வகை பண்பாடு? அடிப்படை பண்பாடே இல்லாமல் தொடர்ந்து கூட்டம் நடத்தி வீரவசனம் பேசுவது என்ன செயல்?

ஆபாசமாக குத்தாட்டம் போட்டும் இளைஞர்களின் உழைப்பில் கிடைத்த பணத்தை சினிமா பிளாக் டிக்கெட் மூலம் கொள்ளையடித்தும் இளைஞர்களை கலாச்சார ரீதியாக சீரழித்த ஒரு நடிகன், அரசியலையும் சீரழித்துக்கொண்டிருப்பதன் விளைவுதான் இந்த மரணங்கள்.

தன்னை நம்பி வரும் கட்சி தொண்டர்களைக் கூட காப்பாற்ற வக்கற்ற ஒருவன், நாட்டின் தலைவனாக கனவு காண்கிறான் என்றால், நாடு விளங்குமா? இதை நாம் அனுமதிக்க முடியுமா?

தனக்கு சகல வசதிகளோடும் தன் உயிருக்கு பவுன்சர்கள் மூலம் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொண்டும் வாழும் நபர், மக்கள், தொண்டர்கள் குறித்த எவ்வித அக்கறையோ பற்றுதலோ இல்லாமல் ஏழை மக்களை கிள்ளுகீரையாக கருதி அரசியல் செய்து பிழைப்புக்காக எதையும் செய்பவர்தான் விஜய். இந்த இழிபிறவியான விஜய் மற்றும் தவெக மாநில நிர்வாகிகளும்தான் இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள். ஆகவே, இவர்கள் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். இறந்துபோனவர்களின் குடும்பத்தினருக்கு விஜயின் சொத்திலிருந்து நட்ட ஈடு வழங்க வேண்டும். ஒரு உயிருக்கு தலா 2 கோடி என்ற அளவிற்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவம் பார்ப்பவர்களுக்கு தலா ஒரு கோடியும் நட்ட ஈடு வழங்க வேண்டும்.

ஊழல், உல்லாசம், ஆடம்பர வாழ்க்கை வாழும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக நேபாளம், லடாக் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்காக போராட்டத்தில் குதிக்கும் போது, போராட்டம் என்றாலே எதுவும் அறியாத சினிமா கழிசடை விஜயை நம்பி அவருக்கு பின்னால் சென்றால் இது போன்ற சம்பவங்கள் நிகழத்தான் செய்யும். சினிமா கழிசடைகளை நம்பி செல்லாமல் அரசியல், கொள்கை, கோட்பாடு, அர்ப்பணிப்பு, தியாகம், நாட்டுப்பற்று எனும் வகையில் மக்கள் நலனை உயர்த்தி பிடித்து செயல்படும் இயக்கம் அமைப்புகள், கட்சிகளைக் கண்டறிந்து நாட்டில் நிலவும் சாக்கடை அரசியலை தூய்மைப்படுத்த போராட முன்வர வேண்டும் என்று இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
முத்துக்குமார்
மாநில செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன