சமஸ்கிருதம், இந்தி தவிர மற்ற மொழிகள் வஞ்சிக்கப்படுவது ஏன்?

“2014-15 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ₹2532.59 கோடியைச் செலவிட்டுள்ளது, இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம்” என்று இந்துஸ்தான் டைம்ஸ் தளம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …