செங்கனல்

செங்கனல்

நிலக்கரி திருடன் – கெளதம் அதானி!

ஹின்டன்பெர்க் அறிக்கையை தொடர்ந்து அதானியின் முறைகேடுகள், மோசடிகள் பற்றிய செய்திகள் அன்றாடம்  வெளி வந்த வண்ணம் உள்ளன.  சமீபத்தில் மோடி அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் நடைபெற்ற நிலக்கரி வயல்களின் சுரங்க ஏலத்தில், அதானி குழுமம் நடத்திய முறைகேடுகளை  ஸ்க்ரோல் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மோடி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலக்கரி சுரங்கத் …

நீதித்துறையை மாற்றியமைக்கும் இஸ்ரேல் அரசு!
தொடரும் மக்கள் போராட்டங்கள்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டு வந்த நீதித்துறையினை மாற்றி அமைக்கும் மசோதாவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள், கடந்த ஒரு மாதமாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கு எதிராக, முதலில் வார இறுதிநாட்களில் மட்டுமே போராடிய இஸ்ரேல் மக்கள், நெதன்யாகு மசோதாவை  திரும்ப பெற மறுக்கவே, எல்லா …

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது.

ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தினார்கள். அதனைப் பயன்படுத்தி பாசிசப் படைகளைக் கட்டினார்கள். ஆதரவாளர்கள் மத்தியில் தனது …

ஆருத்ரா கோல்டு நிறுவன பணமோசடி – அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை!

அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டதற்கு “ஊழல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு என் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்” என்றார் மோடி. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ, வருமானவரித்துறை, ஆளுநர் மாளிகை போன்றவைகளெல்லாம் எதிர் கட்சிகளை முடக்குவதற்கு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனத்திற்கு “பல பத்தாண்டுகளாக ஊழலின் மூலம் பயன் பெற்றவர்கள் …

ஐ.எம்.எப் – உலக வங்கியின் மறுகாலனியாக்க திட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் போராட்டம்

இலங்கையில்  ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் சுமை அனைத்தும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டதால் அதை எதிர்த்து, மக்கள் நடத்திய போராட்டங்களினால் சென்ற ஆண்டு இலங்கையே குலுங்கியது. இதை தொடர்ந்து, கோத்தபய இராஜபக்சே பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்டு, விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

ஆட்சி மாறினாலும் இலங்கை மக்களின் துயரங்கள் தீர்ந்தபாடில்லை. இன்னும் அதிகரிக்கவே செய்கின்றன.…

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்கவிருக்கிறது. அம்மாநிலத்தில் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் ஒருவரை காவிக் கும்பல் கடந்த சனிக்கிழமையன்று அடித்துக் …

12 மணிநேர வேலை. ஆப்பிள்-பாக்ஸ்கானுக்காக கசக்கி பிழியப்படபோகும் தொழிலாளர்கள்!

 

 

ஜெனிபர் ஜெயதாஸ் ஆந்திரா மாநில சிரி சிட்டியில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் 21 வயதான இளம் தொழிலாளி. செல்போன் பேட்டரி, ஆடியோ, சிம் கார்டு ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதிப்பது இவரது வேலை. சிறிதும் ஓய்வில்லாத 8 மணிநேர வேலை முடிந்து வீட்டிற்கு வர ஒண்ணேகால் மணிநேர …

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் பாகுபாடு!

  மக்கள் அதிகாரம் – பத்திரிக்கை செய்தி 31.03.2023 தமிழ்நாடு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்பது ஒரு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும். இந்த கல்லூரியில் ஜூனியர் 1-ல் 50 மாணவர்கள், ஜூனியர் 2-ல் 50 மாணவர்கள் 50 மற்றும் SVS-ல் படித்த…