செங்கனல்

செங்கனல்

எகிறும் விலைவாசியால் அவதியுறும் மக்கள்: கொள்ளை லாபத்தில் கொழிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.

ஒன்றிய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் தலையில் பொருளாதார சுமையை திணிக்கும் போதெல்லாம், அது முன்வைக்கும் ஒரே காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்  விலை அதிகரித்துள்ளது, இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்பதுதான். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று ஏதோ …

தமிழக போலீசின் காவி பாசம்

ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மதவெறி பிடித்த மிருகம் ஒன்று, ஜெய்ப்பூர் ரயிலில் பயணம் செய்த அப்பாவி இஸ்லாமியர்கள் மூவரை, அவர்களது தோற்றத்தை மட்டும் வைத்து அடையாளம் கண்டு, சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வு நடந்த போது, இது எங்கோ வடக்கில் நடந்த தனித்த சம்பவம் என்றே பலரும் நினைத்தனர். ஊடகங்களும் அதனை அவ்வாறே பிரச்சாரமும்…

ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 3

ஆர்எஸ்எஸ் – இன் தலைமைக் குருவாக மிக நீண்டகாலம் அதாவது 33 ஆண்டுகள் பதவி வகித்தவர் “குருஜி” கோல்வால்கர். ஆனால் அதற்குள், “என் கண்முன்னால் ஒரு சிறு வடிவிலான இந்து ராஷ்டிரத்தைக் காண்கிறேன்” என்று அதன் நிறுவன குரு ஹெட்கேவார் தனது இறுதி உறையில் பீற்றிக் கொள்ளும் அளவு ஆர்எஸ்எஸ் வளர்ந்துவிட்டது. அசாம், ஒரிசா, காஷ்மீர்…

ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

பாபரின் பரம்பரையே பாகிஸ்தானுக்கு ஓடுகிறாயா? சவக்குழிக்கு செல்கிறாயா? ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ ‘உயிர் மேல் ஆசையிருந்தால்’ ஜெய் ஸ்ரீராம் என முழங்கு! ராம பக்தனாக மாறு! என்ற தனது மதவெறி கோஷங்களைக் கொண்டு தினமும் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கி வருகிறது காவி கும்பல்.

இந்த கொலை வெறி கோஷங்கள், பாசிஸ்டுகளின், மதக்கலவரங்களை தூண்டுவது  என்ற  யுக்தியை …

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன், அதையே மையமாக வைத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய பாத யாத்திரை கிளம்பிவிட்டனர். …

மழைக்காலக் கூட்டத்தொடரில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : அம்பலப்பட்டு நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம்

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் கொழுந்து விட்டெரியும் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் கலவரம் பற்றி  விவாதம் நடத்த பாஜக மறுத்து வருவதால் நாடாளுமன்றத்தின் இரு …

மின்துறை கார்ப்பரேட்டுக்கு!
கட்டண உயர்வு மக்களுக்கு!

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! சிறுகுறு வணிகர்களே, உற்பத்தியாளர்களே! விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வு என பத்தாண்டுகளாக பாசிச மோடி அரசு தொடுத்துவரும் தாக்குதல்களால் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் உழன்று வருகின்றனர். இந்நிலையில் மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 என்ற பெயரில் மின்துறையை…

மணிப்பூர் கலவரம் – தொடரும் பாசிச சக்திகளின் பொய்ப் பிரச்சாரம்

மணிப்பூர் மாநிலத்தில் 90 நாட்களாக கலவரம் தொடர்கிறது. இதுவரை இந்தக் கலவரம் குறித்து  பிரதமர் நரேந்திர மோடி வாயே திறக்கவில்லை. குக்கி இனப்பெண்களை நிர்வாணமாக்கி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட காணொளி பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியும், பெரும் கண்டனங்களும் எழுந்த போதும் கூட, பெண்களுக்கு எதிரான வன்முறை எந்த மாநிலத்தில் நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் …

விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது!

  விளைந்த நெற்பயிர்களை காப்பதற்காக போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கடலூர் மாவட்டம், நெய்வேலி NLC இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக மேல் வளையமாதேவி,…

மணிப்பூர் பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு
ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்ட்டுகளை தூக்கில் போடு!
ஆர்பாட்ட உரைகள்

“மணிப்பூர்: குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீஸ் துணையோடு நடந்த கொடூரம்! ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்டுகளே குற்றவாளிகள்!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் 23.7.2023 …