மாமல்லன் நீர்த்தேக்கம் – சென்னையின் குடிநீருக்காக காவு கொடுக்கப்படும் மக்கள்

ஜூன் 19, 2026
கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக உருவாக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் உள்ள காசுவேலி மற்றும் உப்பங்கழி போன்ற இயற்கை நீர்நிலைகளைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்தத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த நீர்த்தேக்கமானது, நெம்மேலி, கிருஷ்ணகரணை, தண்டலம், பட்டிப்புலம், திருப்போரூர், மாமல்லபுரம், சாலுவாங்குப்பம், பையனூர் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,161 […]

கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக உருவாக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் உள்ள காசுவேலி மற்றும் உப்பங்கழி போன்ற இயற்கை நீர்நிலைகளைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்தத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நீர்த்தேக்கமானது, நெம்மேலி, கிருஷ்ணகரணை, தண்டலம், பட்டிப்புலம், திருப்போரூர், மாமல்லபுரம், சாலுவாங்குப்பம், பையனூர் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,161 ஏக்கர் பரப்பளவில், ரூ. 342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

1.655 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும், இதன் மூலம் 34 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நீர்த்தேக்கம் கட்டப்படும் பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் குறைக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

எனினும், மீன்பிடி கிராம மக்களும், சுற்றுச்சூழல் மற்றும் பறவை ஆர்வலர்களும், இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டால், வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் இயற்கையான சூழலியல் பாதுகாப்பு முற்றிலுமாக அழிந்து, கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, இதன் கட்டுமானத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான விரிவான உண்மைகளை அறிவதற்காக, இந்த நீர்த்தேக்கம் கட்டப்படவிருக்கும் நெம்மேலி, கோவளம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று நேர்காணல்களை மேற்கொண்டோம். அது குறித்த காணொளி செங்கனல் யூடியூப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

பாருங்கள்!  பரப்புங்கள்!

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன