Month: மே 2024

பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல், தலித் – இஸ்லாமிய – கிருத்துவ மக்களுக்கும் மட்டுமல்ல, இந்து மக்களுக்கே எதிரானது!

18 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 2006 -ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அன்றைய இந்திய ஒன்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ‘பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,’ புதிய திட்டங்கள் கொண்டு வருவதன்…

தனிநீரோட்ட அரசியல், தலித் வகைமை என்ற பெயரில் புளித்துப் போன பின்நவீனத்துவ அடையாள அரசியலை புதிதாகக் கடைவிரிக்கும் பா.இரஞ்சித் & நீலம் கும்பல்!

ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை “தலித் வரலாற்று மாதம்” என்ற பெயரில் நீலம் அமைப்பு ‘கொண்டாடி’ வருகிறது. அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதத்தில் நீலம் அமைப்பின் “வேர்ச்சொல் இலக்கிய விழா”வில் கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் எல்லாரும் சாதிவெறியர்கள் என்ற தொணியில்…

மார்க்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த அமைப்பாளர்

இன்று, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சித்தாந்தத்தை வடித்துக் கொடுத்த மாமேதை, காரல் மார்க்ஸ் அவர்களின் 206வது பிறந்த தினம். இன்றைக்கு மார்க்ஸைப் பற்றி அறிந்த தொழிலாளர்களுக்குக் கூட அவர் ஒரு தத்துவஞானியாக, படிப்பாளியாக, பொருளாதார அறிஞராக மட்டுமே அறியப்பட்டுள்ளார். மார்க்ஸ், பாட்டாளி…

நவீன தாராளவாத தனியார்மயமாக்கலின் சரிவைப் பறைசாற்றும் தேம்ஸ் வாட்டர்!

நவீன தாராளவாதம் முன்வைக்கும் பொருளாதார கொள்கையில் மிக முக்கியமானது தனியார்மயமாக்கம். ஏகபோக நிறுனவங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியார் முதலாளிகளின் கைகளில் கொடுக்கப்பட வேண்டும் என்று நவீன தாராளவாத கொள்கையின் ஆதரவாளர்கள் இன்றுவரை கூறிவருகின்றனர். இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற எல்.ஐ.சி.,…

மே தின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் – ஓசூர், திருச்சி

ஓசூரில் மே தின பேரணி! ஆர்ப்பாட்டம்! மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரில் மாலை 3.00 மணியளவில், சார் ஆட்சியர் அலுவலகம் அருகில், தோழர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், அவர்கள் தலைமையில் எழுச்சியோடு…

பாசிச எதிர்ப்பு பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதே இன்றைக்கு நமது முக்கிய கடமை!

காவி கார்ப்பரேட் பாசிசம் நமது நாட்டைச் சூழ்ந்து கொண்டு மக்களின் மீது பாசிச சர்வாதிகார ஆட்சியைச் செலுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது. காவி கார்ப்பரேட் பாசிசம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று மட்டும் பார்ப்பது தவறு. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை,…

2024 – மே தினத்தில் உறுதியேற்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
கார்ப்பரேட் சுரண்டலுக்குக் கல்லறை எழுப்புவோம்!

எமதருமை உழைக்கும் பாட்டாளி வர்க்கமே! மக்கள் சமூகமானது, சுரண்டுவோர் – சுரண்டப்படுவோர் என பிளவுபட்டதன் விளைவு, சுரண்டுவோரின் சொத்துக்கள் (மூலதனம்) பெருத்துக் கொழிப்பதும் சுரண்டப்படுவோர் வறுமையிலும் பட்டினியிலும் பெருகி வருவதும் நடந்தேறுகிறது. இவற்றை சமன்படுத்தும் முயற்சியாக, ஆட்சியாளர்கள் உறுதியேற்பதும் இயலாமல் போவதும்…

You missed