Category இடஒதுக்கீடு

சுயநிதிக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவமதிக்கப்படுவதை அனுமதியோம்!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்கிற, ஒரு அட்டூழியத்தை, பாசிச மோடி அரசு, அடிமை பழனிச்சாமி ஆட்சியில் புகுத்திவிட்டது. இதைத் தடுக்கத் துப்பில்லாத அன்றைய பழனிச்சாமி அரசு, நீட் தேர்வை அங்கீகரித்து நடைமுறைப்படுத்திய ஆட்டூழியத்தை அமுக்கிவிடும் முயற்சியாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டைத் திணித்து நீட் தேர்வை நிரந்தரமாக்கி…

சாதிவாரி கணக்கெடுப்பு சாதிய இருத்தலுக்குத் தான் வழிவகுக்குமே ஒழிய, சாதியை ஒருபோதும் ஒழிக்காது

1947-போலி சுதந்திரத்தைத் தொடர்ந்து தன்னைக் குடியரசாக அறிவித்துக்கொண்ட அன்றைய ஒன்றிய அரசு “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பைக் கைவிட்டது. சாதி-மத ரீதியான பிரிவினை-வெறுப்பு அரசியலை விதைத்து வரும் பாசிச மோடி அரசோ, “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற கருத்தளவிலான சமத்துவத்தைக்கூட விட்டுவைக்க மனம் ஒப்பவில்லை. பிரிவினை-வெறுப்பு அரசியலைத் தொடர்ந்து விதைக்க வழிவகுக்கும்…

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

 

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது இருக்கும் 50 சதவீத உச்சவரம்பு தகர்க்கப்படும் என்றும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் …