செங்கனல்

செங்கனல்

மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 : இளைத்தவனுக்கு அரிக்கேன் விளக்கு கொழுத்தவனுக்கு மின்விளக்கு!

எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களைத் தாண்டி, அதேபோல் மாநிலங்களின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜூலை 8-ம் தேதி பாசிச மோடி அரசால் மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா 2022 தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா நிறைவேறும் பட்சத்தில், தேசிய மின் தொகுப்பு விநியோக மையம் உருவாக்கப்படும். இந்த மையமானது அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கொண்ட…

முதலாளிக்கு கொடுத்தால் ஊக்கத்தொகை அதுவே மக்களுக்குக் கொடுத்தால் இலவசமா?

“இலவசங்களும் மானியங்களும் மூலதன செலவீனங்களுக்குத் தடையாகவும் எதிர்கால பொருளாதாரத்தைச் சீரிழிப்பதாகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையாகவும் உள்ளன. இதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை; இந்திய நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்” என்று பாசிச மோடி ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும் கர்ஜித்து வருகிறார்.

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் “மாநில …

சூத்திரர்கள் ஆகமவிதிப்படியிலான கோவில்களில் அர்ச்சகராவதைத் தடுக்கும் – சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பது குறித்து  2020ல் கொண்டுவரப்பட்ட இந்து சமய நிறுவன ஊழியர்கள் சட்டம் 2020ஐ (Hindu Religious Institutions employees (service condition) Act 2020) எதிர்த்து போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளிள்ளது. அத்தீர்ப்பில் இந்து சமய நிறுவன ஊழியர்கள் சட்டம்…

மத்திய ஆரிய மாடல் அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு! போராடினால் மாநில திராவிட மாடல் அரசு கைது, பொய் வழக்கு!

23.08.2022 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலத்தில் அனுமதி கொடுத்துவிட்டு பின் தடாலடியாக கைது செய்தது. தருமபுரியிலும் அனுமதி கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டத்தை ஒட்டி 40 பேர்…

மதமாற்றம், கோவில் இடிப்பு : புரளிகளைப் பரப்பி பிரிவினையை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப் பரிவாரக் கும்பல், அதற்காக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த பிரிவினையை விதைக்கப் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றி வருகின்றது.

சமூக ஊடக வெளியில், அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் குழுக்களை லட்சக்கணக்கில் உருவாக்கி அதன்மூலம் வதந்திகளைப் பரப்புவது அவர்களது முக்கியமான யுக்தி. 2014 வரை பாஜகவிற்குக் …

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – தர்மபுரி

ஜிஎஸ்டி வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிச தூக்குக்கயிறு, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் 23.8.2022 அன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி BSNL அலுவலகம் அருகே காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.சிவா பென்னாகரம் வட்டார செயலாளர் தலைமை தாங்கினார்.…

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி

GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 23.8.2022 இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்செட்டி வட்டார செயலாளர் தோழர். ராமு அவர்கள் தலைமை தாங்கினார். GST வரி உயர்வால் விலைவாசி…

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – சேலம்

GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 23.8.2022 இன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 22.08.2022 அன்று இரவு அனுமதி மறுத்து எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தது காவல்துறை. அனுமதி எழுத்து பூர்வமாக மறுத்தாலும், நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொள்ளுங்கள் என வாய்வழி உத்திரவை…

விடுதலைப் போராட்ட வீரர்களை விழுங்கத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்

தேசப்பக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல், பிரிட்டீஸ் காலனியாதிக்கவாதிகளை சமரசமின்றி எதிர்த்துப்போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை இந்து தேசியவாதிகளாக சித்தரித்து அதற்கான கதைகளை ஜோடித்து வருகின்றனர். சமீபத்தில் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுவேந்தல் விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி “திரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை …

GST வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! – கண்டன ஆர்ப்பாட்டம்

GST வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ராம்நகரில் 21.08.22 காலை 10.00 மணிக்கு அத்தியாவசிய பொருட்கள் மீதான GST வரியை ரத்து …