செங்கனல்

செங்கனல்

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசும், குஜராத் அரசும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆவணங்களை, ‘சிறப்புரிமையைக்’ காரணம் காட்டி, சமர்ப்பிக்க விரும்பவில்லை …

தீவிரமாகும் விவசாயிகளின் வறுமை! அம்பலமாகும் மோடியின் அண்டப்புளுகு!

விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவேன் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. ஆனால் இத்தனை ஆண்டுகால மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. மாறாக விவசாயிகளின் வறுமையும், கடனும் தான் இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயம் மூலம் பெறும் வருமானத்தை வைத்து கொண்டு, விவசாயிகள் கண்ணியமாகக் கூட வாழமுடியாமல் …

வேலைநேர சட்டத்திருத்தம்
தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் சீன மாடல் சுரண்டல்.

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை திமுக அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்ட திருத்தம் குறித்து சட்டசபையிலும், பொதுவெளியிலும் பேசிவரும் திமுக அமைச்சர்கள் “இது தொழிற்சாலைகளில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தும்”, “தொழிலாளர் நலன் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்”, “தொழிலாளர் விரும்பினால் …

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என  சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி  தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள் எம்.எல்.எ மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிசத்…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 4

வங்கித்துறை நெருக்கடிக்குக் காரணம் : ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பே! கொரோனா ஊரடங்கு, ரசியா உக்ரைன் போரின் விளைவாகவே விநியோக சங்கலி கடுமையாக பாதிக்கப்பட்டு (supply chain disruption), அதனால் பொருட்களின் வரத்து குறைந்து பணவீக்கம் ஏற்பட்டது; இதன் காரணமாகவே பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது. எனவே, இந்த வங்கித்துறை நெருக்கடியானது, கொரோனா, ரசிய-உக்ரைன் போர் இவையிரண்டால் ஏற்பட்ட…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 3

    வங்கித்துறை நெருக்கடியின் விளைவுகள்   வங்கிகள் என்பது ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் மிகமுக்கியமான ஒன்றாகும். பிற நிறுவனங்களுக்கு வங்கிகள் தந்துள்ள கடன்களைக் கட்ட முடியாமல் வங்கிகள் திவாலாவதும், வங்கிகள் திவாலாகும்பட்சத்தில் அவற்றில் முதலிட்டுள்ள கார்ப்பரேட்டுகள் திவாலாவதுமான இவை ஒன்றையொன்று பாதிக்கும் (domino effect) நிகழ்வுகளாகும். இது ஏதோ ஓரிரு வங்கியோடு நின்றுவிடும் விவகாரமல்ல. இந்த…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 2

    ஏன் வட்டிவீதம் உயரும்போது ஏற்கனவே வாங்கப்பட்ட பத்திரங்களின் விலை உயரத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது? ஏற்கனவே 1000 டாலருக்கு வாங்கப்பட்ட பத்திரமானது ஆண்டுக்கு  15 டாலர் வட்டி (1.5% yield) தருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வட்டி என்பது நிரந்தரமானது (fixed). அதாவது சந்தையில் என்ன ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் முதிர்வு…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 1

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகத் தொடங்கின. அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிகான் வேலி வங்கி மார்ச் 8 ஆம் தேதி திவாலாகியது. அதைத் தொடர்ந்து இரு நாட்களில் நியூயார்க்கின் சிக்னேச்சர் வங்கி திவாலாகியது. இது அமெரிக்க வராலாற்றிலேயே இரண்டாவது, மூன்றாவது பெரிய வங்கிகள் திவாலாகும் நிகழ்வாகும். அமெரிக்காவில் உருவான…

பசு மாட்டைக் கொன்று கலவரம் செய்ய சதி செய்த இந்துமகாசபா காலிகள்

    இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டி விடுவதற்கு காலம் காலமாக காவி பயங்கரவாதிகள் பின்பற்றி வரும் யுக்திகளில் ஒன்று பசுமாட்டை அவர்களே கொன்றுவிட்டு இஸ்லாமியர்கள்தான் கொன்றார்கள் எனப் பொய்ச் செய்தியைப் பரப்புவது. சமூக ஊடகங்களின் பயன்பாடு பெருகிவிட்ட இன்றைய சூழலில் இது போன்றதொரு பொய்ச்செய்தியை உடனடியாக பல ஆயிரம் பேருக்கு பரப்பி மிகப்பெரிய கலவரத்தை…

நொச்சிகுப்பம் மீனவர் கடைகள் அகற்றம்
உழைக்கும் வர்க்கத்தை இழிவாக பார்க்கும் ஆளும்வர்க்க திமிர்

 

 

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)  டி.ராஜா, சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து அந்த சாலையில் பயணம் செய்வதற்கு இடையூறு இல்லாமல் செய்ய …