பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! 

ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது!

பத்திரிக்கைச் செய்தி

மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் கடந்த ஒருமாத காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தது. அதன் இறுதியாக நாங்கள் திட்டமிட்டிருந்த பெரும் ஆர்ப்பாட்டமானது., 21.06.2025 அன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் கோபிநாத் அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். போலிசுத் துறை பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துவரும் நிலையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பல்வேறு சிரமங்களுக்கிடையில் இவ்வார்ப்பட்டம் நடைபெறுவதையும் இதன் அரசியல் முக்கியத்துவத்தையும் சுருக்கமாக விளக்கினார்.

அடுத்து, “பஹல்காம் தாக்குதலைக் கண்டிக்கிறோம்; பாசிசத்தை ஒழிகாமல் பயங்கரவாதம் ஒழியாது” என்பது போன்ற ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளை ஒட்டிய முழக்கங்கள் விண்ணதிர முழங்கப்பட்டன.

முதலாவதாக புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் தோழர் புவன் கண்டன உரையாற்றினார். மோடி கும்பல் எவ்வாறு தேசபக்த நாடகம் போட்டு மக்களை ஏய்க்கிறது; ஆனால் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிந்து ஆபரேசன் சிந்தூரை நிறுத்திவிட்டது; இந்தியா-பாகிஸ்தான் மோதலை நான் தான் நிறுத்தினேன் என 15 முறை டிரம்ப் கூறிய பிறகும் விஸ்வகுருவான மோடி மெளனகுருவாக இருக்கிறார்; மோடி வலிமையானவரோ, பாதுகாவலரோ அல்ல, மாபெரும் கோழை; ஏகாதிபத்திய அடிமை; நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதுதான் தேசவிரோதம்; அவ்வகையில் மோடி கும்பல்தான் தேசவிரோதிகள்; உழைக்கும் மக்கள் போலி தேசவெறி, மதவெறிக்கு பலியாகக் கூடாது; கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்ப்பதும்; காவி பாசிசத்தை எதிர்ப்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் – என விரிவாக மோடி கும்பலின் தேசபக்தி நாடகத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

அடுத்து தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு உரையாற்றினார். பஸ்தாரில் கனிம வளக் கொள்ளைக்காகப் பழங்குடிகளையும் அவர்களுக்கு அரணாகப் போராடுகிற மாவோயிஸ்டுகளையும் மோடி-ஷா கும்பல் கொன்று குவிப்பதையும்; காவி பாசிசத்தை மட்டுமல்ல கார்ப்பரேட் பாசிசத்தையும் நாம் சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டுமெனவும்; காங்கிரசு கட்சி இந்துமதவெறி வளர எவ்வாறு காரணமாயிருந்தது, குறிப்பாக ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுதான் அயோத்தியில் வழிபட அனுமதியளித்தது; ஆகஸ்டு 15, 1947 அல்ல ராமர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்த ஜனவரி 22, 2024 தான் நாட்டின் சுதந்திர தினம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தது – போன்றவற்றை விளக்கி விரிவாக உரையாற்றினார். ;

இறுதியாக புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் முத்துக்குமார் உரையாற்றினார். நாடு முழுவதும் நடைபெற்று வந்த / வருகின்ற இந்துவெறி பாசிசத் தாக்குதல்களின் கொடூரத்தை, புள்ளிவிவரங்களோடு விளக்கி, அதன் தவிர்க்கவியலாத எதிர் விளைவாகத்தான் இசுலாமிய பயங்கரவாதம் வளர்கிறது என்றும்; 1992 பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம் இதன் எதிர்வினைதான் 1993 மும்பை குண்டுவெடிப்பு; 1997 கோவை கலவரத்தின் எதிர்வினை 1998 கோவை குண்டுவெடிப்பு; 2002 குஜராத் படுகொலையின் எதிரிவினைதான் 1993 மும்பை, அகமதாபாத் குண்டு வெடிப்புகளும், 2008 மும்பை தாக்குதலும் ஆகும் என விரிவாக விளக்கி உரையாற்றினார். இசுலாமிய பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கதுதான் ஆனால், நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்து அமைதியான சூழலில் இந்து மக்கள் வாழ வேண்டுமென்றால் இந்துவெறி பாசிசத்தை ஒழித்தே ஆக வேண்டும் என விரிவாக விளக்கி உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் கலைக்குழுவினர் பாடல்கள் பாடினர். இந்துவெறி பாசிசத்தின் எதிர்வினைதான் இசுலாமிய பயங்கரவாதம்; இந்தியா கூட்டணியின் துரோகம்; பக்தி என்ற பெயரில் கலவரத்தை விதைக்க காவி கும்பல் முயல்வது – ஆகிய கருப்பொருள்களின் அடிப்படையில் பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக தோழர் காமராஜ், புரட்சிகர மக்கள் அதிகாரம், சென்னை, அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தகவல்
தோழர் புவன்,
சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

2

Image 1 of 10

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன