Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பசுக்குண்டர்கள் – காவி பாசிச கும்பலின் சட்டபூர்வ அடியாட்படை!

சமுதாயத்தின் நச்சான மோனு மானேசர் போன்ற கிரிமினல்களுக்கு காவிகளின் ஆட்சியின் கீழ் தனிப்பட்ட கெளரவம் கொடுக்கப்படுகிறது. இக்கேடிகள், பொறுக்கிகள், செய்யும் செயல்கள், பதிவேற்றும் காணொளிகள் அறிவுடைய செயலாக, திறமையாக போற்றப்படுகிறது.

ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

2015ல் முகமது அக்லக்கை படுகொலை செய்த போது, தங்களை நியாயப்படுத்திக்கொள்ள காவி பாசிஸ்டுகளுக்கு மாட்டுக்கறி என்ற காரணமாவது தேவைப்பட்டது. ஆனால் இன்று, “நீ முஸ்லீம் என்ற காரணம் மட்டுமே போதும், உன்னைக் கொலை செய்ய” எனக் காவி வெறியர்கள் கூறும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

அண்ணாமலையும் மோனு மானேசரும் காவி பாசிசத்தின் இரண்டு முகங்கள். இன்றைக்கு “என் மண் என் மக்கள்” என சைவப் புலியாக நாடகமாடிக் கொண்டிருக்கும் காவி பாசிஸ்டுகள் வாய்ப்புக் கிடைத்தால் நாளை தமிழகத்தையும் கலவரக் காடாக மாற்றிவிடுவார்கள்.

மழைக்காலக் கூட்டத்தொடரில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : அம்பலப்பட்டு நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம்

நாடாளுமன்றமோ ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் நடத்தும் ‘நீயா, நானா’ கூச்சல் மன்றமாகிவிட்டது. கார்ப்பரேட் முதலாளிகளின் அடிவருடியான மோடி அமித்ஷா காவி கும்பல் தன்னிச்சையாக அந்த மன்றங்களில் மக்கள் விரோத  சட்டங்களை  நிறைவேற்றி வருவதன் மூலம், நாடாளுமன்ற ஜனநாயகம் தனது ஒட்டுக் கோவணத்தையும் இழந்து நிர்வாணமாக நிற்கிறது

ம.பியில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த சம்பவம்: பெருகி வரும் காவி கிரிமினல்கள்!

மதம், இனம், மொழி, சாதி என காவி பாசிஸ்டுகள் தூண்டிவிடும் அனைத்து கலவரங்களிலும் உட்புதுந்து வினையாற்றி விட்டு வெளிவரும் பொறுக்கிகள் பட்டாளம், அதில் கிடைக்கும் அறுவடையில் கணிசமான பங்கை ருசி பார்த்தவுடன் மேலும் மேலும் வெறிகொண்ட மிருகமாக மாறுகிறது. இப்படிப்பட்ட ஒரு மிருகம் தான் மத்திய பிரதேசத்தின் பிரவேஷ் சுக்லா. ம.பி யின்  சித்திக் மாவட்டத்தில்…

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு!
உ.பி. யோகி ஆட்சியின் கீழ் காவி பாசிச கும்பலின் வெறியாட்டம்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

பத்திரிகை செய்தி! 30-06-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 2020-ஆம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இக்கட்சி தலைவராக இருந்த சந்திரசேகர் ஆசாத் ராவனை, 28-06-2023 அன்று காவி பாசிச கும்பல் சுட்டுக் கொல்ல முயன்றுள்ளது. அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேற்கு உத்திரபிரதேசத்தில்…

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி அரசின்
அடுத்த ‘அஜெண்டா’ பொது சிவில் சட்டம்!

    பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க மோடி அரசின் ‘அஜெண்டா’க்களில் ஒன்றான பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து 30 நாட்களுக்குள் கருத்துத் தெரிவிக்குமாறு கடந்த ஜூன் 14 அன்று ஒரு அறிக்கையை 22-வது சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-இல் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என்.சவுகான் தலைமையில் 21-வது சட்ட ஆணையம் பொது…

செந்தில் பாலாஜி கைது – எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் பாசிச தாக்குதல்

    வருமான வரித்துறையையும் அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் தாக்குதலை மோடி அரசு தமிழ்நாட்டில் மீண்டும் அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வந்த சூழலில்…

மராட்டிய மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் காவி பாசிஸ்டுகள்!

கலவரங்களைத் தூண்டிவிட்டு பின்னால் இருந்து இயக்கும் முக்கியத் தலைவர்களைக் கைது செய்யாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பகிரங்கமாக இயங்குகின்றனர். ஒப்புக்கு கைதாகும் கலவரத்தின் முக்கியப் பிரமுகர்கள், நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு, தெம்புடன் வலம் வருகின்றனர்.  ஊடங்களில் அன்றாடம் பேட்டி கொடுக்கின்றனர்.

காவிகளின் கூடாரமாக மாறிவரும்
அலகாபாத் உயர்நீதிமன்றம்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இத்தீர்ப்புகள் உரக்கச் சொல்வது ஒன்றைத்தான் காவி பாசிச சித்தாந்தம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆழமாக வேறூன்றியிருக்கிறது. இந்த தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள் யாரும் ஆர்.எஸ்.எஸ். பாஜக போன்ற இயக்கங்களுடன் நேரடித் தொடர்பில் இல்லை. இருந்தும் அவர்கள் காவி பாசிசத்திற்கு சேவை செய்யும் வகையில் செயல்படுகின்றனர்.