Category காவி கார்ப்பரேட் பாசிசம்

SIR என்ற பெயரில் NRC -யைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் சாதிக்க துடிப்பது என்ன?

காவி பாசிசக் கும்பலானது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், தனது கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான SIR அல்ல. தற்போது SIR என்ற பெயரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (NRC) உருவாக்கும் வேலை தான் நடந்துகொண்டிருக்கிறது. …

தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் – தெருவில் இறங்கிப் போராடுவது ஒன்றே தீர்வு

கடந்த நவம்பர் 21 அன்று, திடீரெனவும், ஒருதலைப்பட்சமாகவும், மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி எறியும் விதமாக, 44 மத்திய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு பதிலாக, ஊதியத் தொகுப்பு (2019), தொழில்துறை உறவுகள் தொகுப்பு (2020), சமூகப்…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூ.பி.களில் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision – SIR) அமலாக்கப்பட்டுள்ளது. எங்கே விண்ணப்பம் பெறுவது; எப்படிப் பூர்த்தி செய்வது; என்னென்ன ஆவணங்களை இணைப்பது; அவற்றை எங்கே பெறுவது – என மக்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்களுமே குழம்பிப்…

காவி பாசிஸ்டுகள் “வந்தே மாதரம்” பாடலை முன்னிறுத்துவது எதற்காக?

கடந்த ஞாயிறு அன்று (26-10-2025) மனதின் குரல் (மன்–கி-பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசியுள்ள மோடி, “மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா என்று வேதங்கள்

பார்ப்பனிய மேலாதிக்கமே இந்து ராஷ்டிரம்

இந்து ராஷ்டிரம் என்பது இசுலாமியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மட்டுமே எதிரானதல்ல; அது பார்ப்பனிய, வேத, மனுதர்ம ஆட்சியை நவீனவடிவில் நிலைநாட்டுவது; ஆகப் பெரும்பாலான ‘இந்துக்களான’ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது – என்பதைச் சமீபத்தில் பா.ஜக. ஆளும் மாநிலங்களில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

உத்திரப் பிரதேசத்தில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள எடவஹா எனும் கிராமத்தில், யாதவ …

நக்சல்பாரி இயக்கத்தின் வீழ்ச்சி என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் மூடநம்பிக்கையே!

சமீபத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட  மாவோயிஸ்ட்டுகள் சட்டீஸ்கரிலும், மகாராஷ்டிராவிலும் சரணடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவரான மல்லுஜூலா வேணுகோபால் ராவ் என்கிற பூபதி, 60 மாவோயிஸ்டுகளுடன் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்திருக்கிறார்.  இப்படி இவர்கள் தானாகவே முன்வந்து சரணடைந்திருப்பது மாவோயிஸ்ட்டுகளின் இயக்கத்தை பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.…

காவி பாசிச ஆதரவாளர்களுக்குப் பிணை,
ஜனநாயக சக்திகளுக்குச் சிறை
உச்சநீதிமன்றத்தின் பாசிசப் பாசம்

காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பலரும் நீதித்துறையையே தங்களது புகலிடமாகக் கொண்டிருக்கின்றனர். காவி பாசிச சக்திகள் இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியும் என அவர்கள் மக்களை நம்பவைக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி தற்போது பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் …

தொழிலாளர்களை பலி கேட்கும் மோடியின் பொருளாதார வளர்ச்சி!

இந்திய தொழிலாளர்களில் பெரும் பகுதி (45 கோடி) அமைப்பு சாரா தொழிலாளர்களே. இவர்களுக்கென்று  தொழில் பாதுகாப்போ, நியாயமான ஊதியமோ அல்லது தொழிலாளர் உரிமைகளோ எதுவும் கிடையாது. மோடி அமைச்சரவையின் கையாளாகதத்தனத்தினால் கொரானா காலத்தில் கோடிக்கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொல்லனா துயரத்திற்கு ஆளாகினர்.

புலம்பெயர் தொழிலாளர்கள், ரயில் டிக்கெட்டுக்கு பணமில்லாமல் பல நூறு கிலோமீட்டர் …

அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக காவு கொடுக்கப்படும் கிரேட் நிக்கோபார் தீவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ‘கிரேட் நிக்கோபார் தீவில்’ (Great Nicobar Island) சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ எனும் பெருந்திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

இத்திட்டத்தை நான்கு இணைத் திட்டங்களாக மோடி அரசு செயல்படுத்தப்போகிறது. முதலாவதாக கிரேட் …

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத்  தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும், விருப்பத்தையும் இணைக்கும் நூலாகவும் உள்ளது. இருப்பினும், இன்று, இந்த உயிர்நாடி வேகமாக உடைந்து…