இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் என்பது ஒரு வெற்று இடம் இல்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அடையாளம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திய மேலாண்மையின் குறியீடு. இத்துறைமுகம் வாயிலாகவே அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய முதலாளிகளின் சரக்குகள் கையாளப்படும். இதற்காக இந்திய கார்ப்பரேட் முதலாளியான அதானியும், நாட்டின் பிரதமர் மோடியும் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.
மறுகாலனியாக்க கொள்கையின் கீழ் நாட்டின் குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும், தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை தாமே விலைகொடுத்து வாங்கிகொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது. தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன.
காவிக் கும்பலுக்கு நெருக்கமானவர்கள், அடிபணிபவர்கள் எவ்வளவு கீழான மக்கள் விரோத, தேச விரோதக் குற்றங்களைச் செய்திருந்தாலும் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்லலாம், ஏன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் கூட ஆகலாம். ஆனால் தனது திட்டங்களுக்கும், நோக்கங்களுக்கும் அடிபணியாதவர்களை அமலாக்கத்துறை (Enforcement Directorate) மூலம் அச்சுறுத்துவதும் கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கிறது.
கலவரங்களைத் தூண்டிவிட்டு பின்னால் இருந்து இயக்கும் முக்கியத் தலைவர்களைக் கைது செய்யாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பகிரங்கமாக இயங்குகின்றனர். ஒப்புக்கு கைதாகும் கலவரத்தின் முக்கியப் பிரமுகர்கள், நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு, தெம்புடன் வலம் வருகின்றனர். ஊடங்களில் அன்றாடம் பேட்டி கொடுக்கின்றனர்.
இந்தியாவின் பொதுச் சொத்துக்களை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டே காவி கும்பல், மணிப்பூரில் இனவெறித் தீயை மூட்டி கலவரத்தை தூண்டிவிட்டிருக்கிறது.
சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் போராட்டம் வெறும் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல. அனைத்து ஓட்டுக்கட்சிகளின் துரோகத்திற்கும், நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையிடும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் மோடி அரசுக்கு எதிரான போராட்டமும் கூட.