வா தோழா பாசிச வேரை பிடிங்கியெறிவோம்! – கவிதை
வா தோழா
பாசிச வேரை
பிடிங்கியெறிவோம்!
புரட்சி
புயலென
காற்றைக் கிழித்துக்கொண்டு வருகிறது.
பாசிச கும்பலுக்கு
பாடை கட்ட
களம் காண்கிறது
ஜென்சி படை
ஜனநாயகத்தின்
முகத்தைச் சிதைத்த
மக்கள் விரோதக்
கும்பலை
அப்புறப்படுத்த
அணிதிரள்கிறது
பேச்சுரிமை,
கருத்துரிமை,
– என
பறிக்கப்பட்ட
ஜனநாயகத்தை
மீட்டெடுக்க
எரிமலையின்
தீப்பிழம்புகளாய்
வெடித்து கிளம்புகிறது
களத்தில்
மோடி-ஷாவின்
மதவெறி அரசியல்
வித்தையெல்லாம்
இனி பலிக்காது…
அடுத்தடுத்து
தன்னை கூர்தீட்டி
அடுத்த
இலக்கை நோக்கி…
பயணிக்கின்றனர்
பகத்சிங்கின்
வாரிசுகள்
புதியதோர்
உலகம் படைக்க…
இதோ
இளம் புரட்சியாளர்கள்
வீதி நிரப்பி
வீரம் செய்கின்றனர்..
ஏதோ
அடையாளத்திற்காக
போராடும் கூட்டமென
எண்ணிவிட்டது
போல்
பாசிச கும்பல்
கொலைபாதக குண்டர்களை
சீருடை அணிவித்து
களத்தில் இறக்கினாலும்,
காவித்தடிகள்
கால் கைகளை
உடைத்தாலும்,
பாலியல் தொல்லை
கொடுத்தாலும்
குண்டு கட்டாகத்
தூக்கிச் சென்றாலும்
அச்சுறுத்திப் பார்த்தாலும்
அஞ்சுமோ
கெஞ்சுமோ
இப்படை?!
அதிகார வர்க்கத்தின்
தடையை மீறி
தடியை மீறி
தடுப்பை உடைத்து
தலை நிமிர்கிறது
தலைமுறை
எடுத்த கொள்கையில்
ஊன்றி நின்று
அதிகார வர்க்கத்தின்
அடித்தளத்தை
அகற்ற முன்னேறுகிறது.
விலங்கை உடைத்து
விடிவெள்ளியாய்
எழுகிறது.
இனி இழப்பதற்கு
ஏதுமில்லை…
வா தோழா
பாசிச வேரை
பிடிங்கியெறிவோம்!
- கீரன்
