பத்திரிக்கைச் செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே!
“பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதகாலமாக புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து வருவதை அறிவீர்கள்.
இதன் இறுதியாக வரும் சனிக்கிழமை (ஜூன் 21, 2025) காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் ஆர்ப்பட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கடும் சிரமங்களுக்கும் தடைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், போலிசு அனுமதி தராமல் இழுத்தடித்து வந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் போராடி அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம்.
இவண்,
தோழர் முத்துக்குமார்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு.


