பரஸ்பர வரி – பதிலடி வரி என்ற பெயரில் உலக மேலாதிக்க அமெரிக்கா நடத்தும் வர்த்தகப் போரை முறியடிப்போம்!

 

உலக மேலாதிக்க அமெரிக்காவின், அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் வர்த்தகப் போரை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் துவக்கமாக ஏப்ரல் 2 முதல் பதிலடி வரி அல்லது பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்காவின் தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்கிற கத்தியை, இந்தியா, வெனிசுலா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகள் மீதும் இதர வளர்ந்த நாடுகள் மீதும் இறக்கி, அதன் மூலம் தன் நாட்டின் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள மூர்க்கமாக முயன்று வருகிறார்.

அதாவது, இதுவரை, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரியை விதித்திருக்கலாம். அதே உணவுப் பொருள்களுக்கு இந்தியா ஏற்றுமதி வரியாக 30% விதித்திருக்கலாம். இதற்கு மாற்றாக, இதை சமன்படுத்தும் முயற்சியாக, பதிலடி வரி அல்லது பரஸ்பர வரியை முன்னிறுத்தி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 10% குறைக்கலாம் அல்லது அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை 30% உயர்த்தலாம்.

இவை சரியான முயற்சியாக தோன்றலாம். ஆனால், இதில் அடங்கியுள்ள சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, அமெரிக்காவைப் பொறுத்தவரை, பருப்பு அல்லது அரிசி போன்ற உணவுப் பொருள்கள் எதுவாக இருப்பினும், அதற்கான உற்பத்தி செலவு முழுவதையும் அந்நாட்டு அரசால் மானியமாகத் தரப்படுகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை மானியம் மிகவும் குறைவாக தரப்படுவதால், அமெரிக்கப் பொருளுக்கு ஈடாக ஏற்றுமதி வரியைக் குறைக்க முடியாது. மோடி அரசும், அமெரிக்காவை போல உற்பத்தி செலவு முழுவதையும் மானியமாக தராது.

உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு, இரண்டு நாடுகளும் ஒரே உற்பத்தி செலவில் தான் பருப்பு அல்லது அரசி போன்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதாக ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்புகிறது. இதன் மூலம், மேற்கண்ட வரிமுறையை அதாவது, பரஸ்பர அல்லது பதிலடி வரிமுறையை நியாயப்படுத்த முயல்கிறது உலக மேலாதிக்க அமெரிக்கா மேல்நிலை வல்லரசு. மேலும், இந்திய விவசாயப் பொருள்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக மிரட்டி வருகிறார்.

அமெரிக்க கட்டளைக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அடிபணிவதோடு, அதன் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியும் என்பதற்கு உதாரணமாக, இதுவரை, ஏறக்குறைய 55% அளவிற்கு வரியை மோடி அரசு குறைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மேலும், டிஜிட்டல் வரியை 6% இரத்து செய்வதற்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் நிதி வடிவில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இப்படியே அமெரிக்காவிற்கு அடிபணிந்து வரியைக் குறைத்துக் கொண்டே போனால் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு 60 ஆயிரம் கோடி நட்டம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவை அனைத்தும் உள்நாட்டு தயாரிப்பாளர்கள் தலையிலேயே விடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இருப்பினும், இந்திய முதலாளிகளிடம் இறக்குமதி வரியை அமெரிக்காவும், ஏற்றுமதி வரியை குறைக்கவும் மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அமெரிக்க வர்த்தகத்துறை செயலர் மோடியிடம், தன் நாட்டின் சோளத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவிலிருந்து சோளம், அரிசி, பருப்பு, சோயாபீன்ஸ், பருத்தி போன்றவைகள் இந்தியாவிற்குள் இறக்கி விடப்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்திய விவசாயிகள் விரைவில் போண்டியாக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், அமெரிக்க மிரட்டலுக்கு சவால் விடும் வகையில் கனடா, சீனா ஆகிய நாடுகள் 15% முதல் 25% வரை இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. மேலும், ஐரோப்பா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளும், தங்கள் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் உணவுப் பொருட்களான பால், வெண்ணை, சீஸ், அரிசி போன்றவைகளுக்கு 50% இருந்து 70% வரை கூடுதல் வரியைத் திணித்து அமெரிக்காவுடன் முட்டி மோதுகிறது.

இந்தியா முதல் இதர நாடுகள் தங்களுடைய இறக்குமதி வரியை அதிகரித்து, அமெரிக்காவை கொள்ளையடித்து வருவதாக அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரி குற்றம் சுமத்தி வருகிறார். இவற்றை நியாயப்படுத்தவே பரஸ்பர அல்லது பதிலடி வரியைத் திணித்து வருகிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு.

மேற்கண்ட நாடுகளைப் போலவே, எதிர்வினையாற்றி அமெரிக்க மேலாதிக்கத்தை மோடி வீழ்த்த வேண்டும். அதற்கு, தொடைநடுங்கி மோடி அரசு தயாராக இல்லை. எனவே, உலக மேலாதிக்க அமெரிக்க தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள் திணிக்கும் மறுகாலனியாதிக்க வர்த்தகப் போரை முறியடித்தாக வேண்டும். அதற்கு, தேவை ஒரு உள்நாட்டுப் போர்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன