கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.

இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான ‪@U2Brutus‬ மைனர், முக்தார் ‪@MyIndia24x7‬ , ‪@OnionRoastChannel‬, ‪@TribesTamil‬ உள்ளிட்ட பல்வேறு யுட்யூப் சானல்கள் போராடும் மக்களை கொச்சைப்படுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றன.

1. ஏரியில் மண் எடுக்க மக்கள் வலியுறுத்தியும் அங்கு மண் எடுக்காமல், கரடிபுதூர் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கான சமதளமான இடத்தில் மண் எடுக்கிறது அரசாங்கம். ஆனால், மேற்கண்ட திமுக சார்பு ஊடகங்கள் அப்பட்டமாக அரசாங்கம் ஏரியில்தான் மண் எடுக்கிறது என்று கூசாமல் போய் சொல்கிறார்கள்.

2. மண் குவாரிக்கு எதிராக போராடுபவர்கள் அந்த ஊர் மக்களே இல்லை என்று கூறுகிறார் u2 brutus. அந்த ஊர் மக்கள் போராடவில்லை என்றால் மண் குவாரிக்கு எதிராக போராடியதாக கரடிபுதூர் பெண்கள் 41 பேர் மற்றும் ஆண்கள் 3 பேர் என்று 44 பேர் மீது திமுக அரசாங்கம் எப்படி வழக்கு பதிந்தது?

3. அங்கு மண் எடுப்பதே கரடிபுதூர் மக்களுக்கு சாலை போடத்தான் என்கிறார்கள் இந்த திமுக சார்பு ஊடகக்காரர்கள். ஆனால், அரசு ஆவணத்தில் மற்றும் பல்வேறு செய்தி ஊடகங்களில், மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு என்று எல்லாவற்றிலும் கரடிபுதூரில் மண் எடுப்பது குறித்த அரசாணையில் – “கனிமங்களும், குவாரிகளும் சிறுகனிமம் திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி வட்டம் கரடிபுத்தூர் கிராமம்-கல்லாங்குத்து புறம்போக்கு- புல எண். 51/1 (பகுதி)-லிருந்து தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் (TNRIDC) மூலம் நடைபெறும் சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை திட்ட பணியான Formation of New six lane road from Punnapakkam to Tiruvallur Bypass with paved shoulders and two-lane service road on both sides in section-2 package-2 of CPRR under EPC mode க்காக 33,334 கனமீட்டர் கிராவல் மண்ணை குவாரி செய்து கொள்ள தி/ள். Larsen & Toubro Ltd., நிறுவனத்தினருக்கு அனுமதி அளித்து-உத்தரவிடுவது” என்று உள்ளதன் பொருள் என்ன?

இதுபோல் பல்வேறு அவதூறுகள் இப்போராட்டத்தை ஒட்டி பரப்பப்படுகிறது. இவற்றை ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகிறார்கள் கரடிபுதூர் கிராம மக்கள்.

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன