காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

 

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி – ஆர்.எஸ்.எஸ்.  தலைமையிலான காவி பாசிசக் கும்பல் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு சுனாமி போல மக்களை மூழ்கடித்து வரும் நிலையில்,தேர்தலின் மூலம் பாசிசத்தை ஏன் வீழ்த்த முடியாது என்பதையும் பாசிசத்தையும் அதைக் கொண்டு வரும் கும்பலையும் வீழ்த்துவதற்கான சரியான, நிச்சயகரமான பாதை என்ன என்பதையும் விளக்கி இச்சிறு வெளியீட்டை புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பு கொண்டு வந்துள்ளது.

மிகவும் நெருக்கடியான சூழலில் இவ்வெளியீடு கொண்டு வரப்பட்டுள்ளது. பாசிசத்தை வீழ்த்துவதில் அக்கறையுள்ள ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் இதை வாங்கிப் படிக்குமாறும், பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

பக்கங்கள் : 32
நன்கொடை : ரூ.30

வெளியீடு தேவைப்படுவோர்
தொடர்புகொள்ள
97901 38614
90252 13374
89030 42388

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன