மின்துறை கார்ப்பரேட்டுக்கு!
கட்டண உயர்வு மக்களுக்கு!
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது.
இதனை ஒட்டி ஒரு பிரச்சார வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்துறையைக் கார்ப்பரேட்மயமாக்கி தனியாருக்கு விற்பதற்காகவே இந்தக் கட்டண உயர்வு என்பதை இவ்வெளியீடு அம்பலப்படுத்துகிறது. மின்சார சட்டதிருத்த மசோதா-2022வும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதும் கார்ப்பரேட்டுகளின் பகற்கொள்ளைக்கான முன் தயாரிப்புகள் என்பதை சுட்டிக் காட்டி, கார்ப்பரேட்டுகளின் கொள்ளையே மின்சார வாரியங்களின் நட்டத்திற்குக் காரணம் என அமபலப்படுத்துகிறது.
மேலும் புதிய கல்விக் கொள்கை, மின்சார சட்டத் திருத்தம், தொழிலாளர் நலச் சட்டத்தொகுப்பு, வேளாண் சட்டங்கள், வனப்பாதுகாப்புச் சட்டத் திருத்தம் என அடுத்தடுத்து வரும் மறுகாலனியாக்கத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக, காவி கார்ப்பரேட் பாசிசம் மக்கள் மீது தொடுத்துள்ள போருக்கு எதிராக அணிதிரள அறைகூவுகிறது இப்பிரச்சார வெளியீடு.
விலை ரூ.10
பிரதிகளுக்கு தொடர்புகொள்ள
8903042388
9025213374
9790138614