பிபிசி ஆவணப்படமும்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது, காவி பாசிசக் கும்பல். கர்ப்பிணிகளின் பிறப்புறுப்பைக் கிழித்து கருவை வெளியே எடுத்து தீயிலிட்டு எரித்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என வெறிக்கூச்சலிட்டது.

நினைக்கவே நெஞ்சம் பதைபதைக்கும் இக்கொடூரத்தைச் செய்த கொடிய மிருகங்களெல்லாம் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இப்பாசிச இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய மோடி-அமித்ஷா கும்பலோ இன்று நாட்டை ஆள்கிறது. இது திட்டமிட்ட இனப்படுகொலை என்பதற்கு ஆயிரமாயிரம் சாட்சிகள் இருந்தும் “கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் இறந்தவர்களை அரசு சதி செய்து கொன்றது என்று கூற முடியுமா? அதேபோல்தான் குஜராத் அரசின் கைமீறிப் போன இந்த வன்முறைக்கு மோடியைப் பொறுப்பாக்க முடியாது” என்று தீர்ப்பளித்து மோடியைக் காப்பாற்றியது, உச்ச (மனு)நீதி மன்றம். பொதுவாகவே மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் பதவியிலும் உல்லாச வாழ்விலும் மிதக்கிறார்கள். இவைகளை அம்பலப்படுத்திய செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கை யாளர்கள், அதிகாரிகள் நரவேட்டையா டப்படுகிறார்கள். அல்லது சிறையில் கிடக்கிறார்கள்.

விடுதலைப்போராட்ட வீரன் உத்தம்சிங்கின் வாழ்க்கையைக் கூறும் திரைப்படத்தை ஆஸ்கருக்குப் பரிந்துரைத்தால் பிரிட்டிஷ் மனம் புண்படும் என்று கூறிய தேச விரோத மோடி கும்பல்தான், பிபிசி ஆவணப்படத்தை ‘பிரிட்டிஷ் காலனிய மனோபாவம்’ என்று கூறி கூச்சநாச்சமின்றி தேசபக்த போர்வைக்குள் ஒளிந்துகொள்கிறது.

குஜராத் இனப்படுகொலையை அப்போதே ஆதரித்து நின்றவனும் மோடியைப் பிரதமராக்குவதற்கு கோடிக்கணக்கில் கொட்டி இறைத்தவனும்தான் அதானி என்ற கார்ப்பரேட் முதலாளி. மோடி பிரதமராகும் முன்பு வெறும் 700 கோடி டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு ஜனவரி 2023-இல் 12,000 கோடி டாலராகப் பெருகியுள்ளது. அதில் 10,000 கோடி டாலர் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுருட்டியதாகும். புரியும்படிக் கூறினால் கொரோனா ஊரடங்கின்போது இந்திய மக்கள் ஒருவேளை உணவுக்கே பறிதவித்து வந்த சூழலில் அதானியின் ஒருநாள் வருமானம் 1,000 கோடி ரூபாய்.

இந்த ‘வளர்ச்சி’யின் பின்னணியில்தான் மோடி-அதானி கூட்டணியின் சூட்சமம் உள்ளது. 2014-இல் மோடி பிரதமராகக் காரணமான “துடிப்பான குஜராத் மாடல்” என்ற இயக்கத்தின் பிதாமகனே அதானிதான். மோடி பிரதமரான பின்பு அதானியின் விமானத்தில்தான் டெல்லி வந்தார். அதானிக்கு நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுக்க SBI மூலம் ரூ.6000 கோடி கொடுத்து, அதன் இயக்குனரையும் உடனழைத்துக் கொண்டு மோடி ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தார். இலங்கையின் காற்றாலை மின்உற்பத்தித் திட்டத்தை ‘மோடி வற்புறுத்தியதால்தான் அதானிக்குக் கொடுத்தோம்’ என்று அந்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். பாசிச மோடி கும்பலின் நலனும் அதானியின் நலனும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகும். அதனால்தான் மோடி அரசின் மீதான ஊடகத்துறையின் கொஞ்சநஞ்ச விமர்சனங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் NDTV நிறுவனத்தை சதித்தனமாக அதானி கையகப்படுத்தினார்.

கடந்த பத்தாண்டுகளில் 7 விமான நிலையங்கள், 12-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் என அதானியின் சாம்ராஜ்ஜியம் விரிவடைவதற்கான மூலதனம் அதானியோ அவன் குடும்பமோ ‘உழைத்து’ சம்பாதித்ததல்ல. முதலாளித்துவ அடிவருடிகள் சொல்வதுபோல் அவனது ‘திறமையால்’ சேர்த்ததுமல்ல. அவையனைத்தும் பொத்துறை வங்கிகளை பலவழிகளில் கொள்ளையடித்துத் திரட்டப்பட்டதே.

கல்விக் கடன், விவசாயக் கடøனைக் கட்ட முடியாத உழைக்கும் மக்களை அவமானப்படுத்தி அடாவடியாக வசூல் செய்யும் பொதுத்துறை வங்கிகள், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்டுகளுக்கு 10 இலட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி (ரைட் ஆப்) செய்துள்ளது. இன்னும் பல இலட்சம் கோடி வாராக்கடனாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பைத் திணித்து, உழைக்கும் மக்களையும் தொழில்முனைவோரையும் மரணக்குழியில் தள்ளிய மோடி அரசு, 2019-இல் கார்ப்பரேட்டுகளுக்கு வரிக்குறைப்பு செய்துள்ளது. இதன் மூலம் மட்டும் கார்ப்பரேட்டுகள் ரூ.2 இலட்சம் கோடியைக் கொள்ளையடித்துள்ளன. இவையில்லாமல் தொழில் தொடங்குவதற்கான மானியங்கள், சலுகைகள் தனி. கார்ப்பரேட்டுகள் அடித்த இப்பகாசுரக் கொள்ளையில் எத்தனை இலட்சம் கோடியை அதானி கும்பல் மட்டுமே விழுங்கியுள்ளது என்பது மோடி அரசுக்கும் அதானிக்கும் மட்டுமே வெளிச்சம்.

அதானி கும்பல் வெளிநாட்டிலிருந்து போலி நிறுவனங்கள் மூலம் தனது நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து, அதன் மூலம் பங்குகளின் விலையை செயற்கையாக ஊதிப்பெருக்க வைத்துள்ளது. நேரடியாக கடன் தள்ளுபடியையும் வரிச்சலுகையையும் அனுபவிப்பது மட்டுமின்றி, இவ்வாறு ஊதிப்பெருக்கப்பட்ட பங்குகளையே மீண்டும் வங்கிகளில் அடமானம் வைத்து (Share Pledging) பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் சேமிப்பைக் கொள்ளையடித்துள்ளது. ஊதிப்பெருக்கப்பட்ட பங்குகள் என்று தெரிந்தே SBI. LIC-இல் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் சேமிப்பை அதானியின் பங்குகளில் முதலீடு செய்ய வைத்துள்ளது, மோடி அரசு.

பங்குச் சந்தை சூதாடி ஹர்சத் மேத்தாவின் சீடரும், பாங்குச் சந்தை மோசடிக்காக ‘பங்குச் சந்தையில் ஈடுபடக்கூடாதென’ 2008-இல் செபியால் தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளியுமான கேத்தன் பரேக் என்பவன்தான் அதானி குழுமத்தின் பங்குகளைக் கையாண்டு வருகிறான். இப்போலி நிறுவனங்களை இயக்கி வரும் அதானியின் சகோதரர்கள் மீதும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) விதிமுறைகளை அதானி குழுமம் பல்வேறு வகைகளில் மீறியுள்ளது.

இக்கிரிமினல் நடவடிக்கைகள் அனைத்தும் அம்பலமான பின்பும் ரிசர்வ் வங்கியோ, செபியோ இப்போதுவரை வாய்திறக்கவில்லையென்றால் மோடி-அதானி கும்பலின் உறவு அந்தளவுக்கு ஆழமானது. அதானியின் மோசடி அம்பலமானதும் ‘தேசத்திற்கு ஆபத்து’ என்கிறது, காவி பாசிசக் கும்பல். அதானி பங்குகளின் விலை சரிவதைத் தடுக்க ‘தேசபக்தியுள்ள இந்தியர்கள் அதானியின் பங்குகளை வாங்க வேண்டும்’ என்கிறார், பா.ஜ.க. எம்.பி. எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் வாயே திறக்காமல், பாசிஸ்டுகளுக்கே உரியவகையில் திமிராகப் பேசுகிறார், மோடி.

இப்பங்குச் சந்தை மோசடிக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி. போன்றவற்றில் குவிந்துகிடக்கும் மக்களின் சேமிப்பைத்தான் அதிகாரிகள், அரசின் துணையுடன் இக்கார்ப்பரேட்டுகள் கடனென்ற பெயரில் கொள்ளையடிக்கின்றனர். இவை வாராக்கடனாகத் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அரசு பல்வேறு வரிச்சலுகைகள், மானியங்களையும் வாரி வழங்குகிறது. இவைகளால் அரசுக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கும் ஏற்படும் இழப்புகளையெல்லாம் ஈடுகட்டவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு என இச்சுமைகளை மக்கள் தலைமீது ஏற்றுவதோடு, மக்களுக்கான மானியங்கள், இலவசங்களை வெட்டியும் வருகிறது, மோடி அரசு.

குஜராத்தில் இசுலாமியர்கள் கொன்று குவிக்கப் பட்டதும், நாள்தோறும் சிறுபான்மையினர், தலித்துகள், கம்யூனிஸ்டுகள், ஜனநாயக சக்திகள் மீது கொடூரமாக ஏவப்பட்டு வருவதும் காவி பாசிசத் தாக்குதல் என்றால்; கார்ப்பரேட்டுகளின் நெருக்கடியைத் தீர்க்க மக்கள் தலைமீதே சுமைகளை ஏற்றி வைத்து மக்களைப் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் மோடி கும்பல் தள்ளுவது கார்ப்பரேட் பாசிசத் தாக்குதலாகும்.

இவைகளையெல்லாம் சகித்துக் கொண்டு வாழப் போகிறோமா? அல்லது காõர்ப்பரேட் கொள்ளையையும் பாசிச ஒடுக்குமுறைகைளையும் துடைத்தொழிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளப் போகிறோமா? என்பதுதான் காலம் இந்திய மக்களின் முன் வைத்திருக்கும் கேள்வி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

தொடர்புக்கு : 89030 42388, 97901 38614,
90252 13374
பாருங்கள் : senkanal youtube
படியுங்கள் : www.senkanal.com 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன