தோழர் அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர்.கணேசன்(எ) அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி பல தடைகளை கடந்து தர்மபுரியில் இன்று 17.07.2022 சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28.06.2022 அன்று தோழர்.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். தோழரின் அர்ப்பணிப்பு தியாகத்தை போற்றுகின்ற வகையில் குறிப்பாக நக்சல்பாரி மண்ணில் தோழர்.கணேசனின் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் தருமபுரி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்துவது என தீர்மானித்தோம்.
அதன்படி தமிழகம் முழுவதும் பிரசுரங்களும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு வேலைகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது தர்மபுரி காவல்துறை இந்த நிகழ்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்கிற அடிப்படையில் பல வகையில் முயற்சித்தது.
குறிப்பாக ஒரு நாளுக்கு முன்பாக, தீர்மானிக்கப்பட்ட திருமண மண்டபத்தின் அதனுடைய முதலாளியை மிரட்டி இவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த மண்டபம் கொடுத்தால் மண்டபத்தை சீல் வைப்போம் என அச்சுறுத்தி உள்ளது தர்மபுரி காவல்துறை. இதனை அடுத்து மண்டபத்தை தர முடியாது காவல்துறை மிரட்டுகிறது, உளவுத்துறை, மிரட்டுகிறது என்று மண்டபத்தின் உரிமையாளர் பயந்து போய் நான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு நாள் மட்டுமே நேரம் இருந்த நிலையில் மண்டபம் கிடைக்காமல் போய்விட்டால் நிகழ்ச்சியை நடத்தாமல் நிறுத்தி விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டது தர்மபுரி காவல்துறை. ஆனால் தோழர்கள் கடுமையான உழைப்பிற்கு பிறகு, இரவோடு இரவாக தோழர் ஒருவருக்கு சொந்தமான தர்மபுரி நகரத்தில் உள்ள விவசாய நிலத்தில் பந்தலிட்டு நிகழ்ச்சியை நடத்தி முடிப்பது என தீர்மானித்தோம்.
அதன்படி இரவு மட்டுமே நேரம் இருக்கிற நிலையில் இரவு முழுவதும் கண்விழித்து தோழர்களின் கடும் உழைப்பில் பந்தல்கள் போடப்பட்டன. இதனை மோப்பம் முடித்த காவல்துறையினர் அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்த கூடாது என பெரிய கும்பலை திரட்டி வந்து மிரட்டி பார்த்தது, குறிப்பாக கொடி நடுவது கூடாது அது சட்ட விரோதம் என்று சற்றும் பொருத்தமில்லதா சப்பை காரணத்தை காட்டி நிகழ்ச்சி நடத்த கூடாது என மிரட்டினர். வழக்கு போடுவேன், கைது செய்வேன் என்று தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது.
இதற்கெல்லாம் பிடிகொடுக்காமல், என்ன நடந்தாலும் எதிர்கொள்வது என்கிற அடிப்படையில் தோழர்கள் வேலையை நிறுத்தாமல் கொண்டு சென்றனர். குறிப்பாக கொடிகளை அகற்ற முடியாது இது எங்களுடைய சொந்த நிகழ்ச்சி எங்களுடைய சொந்த நிகழ்ச்சிக்கு சட்டபூர்வமாக அனுமதி பெற தேவையில்லை என்பதை விளக்கி நாங்கள் கொடியை அகற்ற மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்த பின்னர், ஒலிபெருக்கி பந்தல் அமைத்த நபர்களை அழைத்து நீங்கள் ஒளிபெருக்கி பந்தல் அமைத்துக் கொடுத்தால் வழக்கு உங்கள் மீது போடுவோம் ஒலிபெருக்கி சாமான்களை எடுத்து செல்வோம் என்று அவர்களையும் மிரட்டி பார்த்தனர். காவல் துறை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. நிகழ்ச்சி தொடங்கும் வரை தொந்தவு கொடுத்தனர். பிறகு படத்திறப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
தோழர். அருண் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தலைமை தாங்கினார். நினைவேந்தல் உரையாக தோழர். பாலன் வழக்கறிஞர் கர்நாடகா உயர்நீதிமன்றம். தோழர்.சுந்தர்ராஜன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு, தோழர்.கதிரவன் ம.க.இ.க கோவை தோழர்.வெங்கடேசன் வட்டார குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம் பென்னாகரம். தோழர். கிருஷ்ணமூர்த்தி மாநில தலைமை குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், வேதாரண்யம். தோழர். முத்துக்குமார், மாநில செயலாளர், மக்கள் அதிகாரம் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தோழர். கணேசன்(எ) அன்பழகன் படத்தை தோழர்.ராமலிங்கம் தர்மபுரி வட்டார செயலாளர் அவர்கள் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தோழர்.கணேசன் (எ) அன்பழகன் தியாகத்தை போற்றி தர்மபுரி மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக தோழர். சிவா வட்டார செயலாளர் பென்னாகரம். அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
தகவல்
தோழர்.முத்துக்குமார்
மாநிலச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
9790138614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன