Category காவி கார்ப்பரேட் பாசிசம்

கன்வார் யாத்திரை : பக்தியை மதக்கலவரமாக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார், கங்கோத்ரி, கோமுகி மற்றும் கேதார்நாத் புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்தக்…

கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க PLI, சம்பளம் கொடுக்க ELI

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான ஊக்கத்தொகை (Employment Linked Incentive-ELI) என்ற திட்டத்திற்கு மோடி அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் படி, முதல் முறையாக EPFO-வில் பதியும் ஒரு தொழிலாளிக்கு ஊக்கத்தொகையாக அவருடைய முதல் மாத சம்பளத்தை (அதிகபட்சமாக 15000 ரூபாய் வரை) இரண்டு தவணையில் கொடுக்கப்படும்.

வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு ஊக்கத்தொகையாக ஒரு தொழிலாளிக்கு …

இரயில் கட்டண உயர்வு: மோடி அரசின் அடுத்த இடி!

“நான் நாட்டுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரயில்வே யாரும் கற்பனை செய்திருக்க முடியாத மாற்றத்தைக் காணப்போகிறது” என்று, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்ததொரு பொதுக்கூட்டத்தில் பேசினார் மோடி. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வைத் தவிர வேறெந்த பெரிய மாற்றமும் இந்த …

ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் – கார்ப்பரேட் சேவையில் மோடியுடன் போட்டி போடும் காங்கிரஸ், தெலுங்குதேசம்

நடப்பிலுள்ள ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை சட்டத்தை திருத்தி, தொழிற்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025 என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் கீழ்கண்ட திருத்தங்களை செய்துள்ளனர்.

ஒரு நாளின் அதிகபட்ச வேலை நேரம் 9 மணி நேரத்திலிருந்து

பெயரளவிலான ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளைக் கூட அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து நீக்கத் துடிக்கும் காவி பாசிச கும்பல்

ஒன்றிய பாஜக அரசு, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நாளான ஜூன் 25-ஐ ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது. இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள் பலர் அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் அரசால் அரசியலமைப்பு முகப்புரையில் சேர்க்கப்பட்ட ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’…

சமஸ்கிருதம், இந்தி தவிர மற்ற மொழிகள் வஞ்சிக்கப்படுவது ஏன்?

“2014-15 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ₹2532.59 கோடியைச்  செலவிட்டுள்ளது, இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம்” என்று இந்துஸ்தான் டைம்ஸ் தளம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சியினர் மீது தாக்குதல் தமிழ்நாட்டில் தடையின்றி வளர்ந்து வரும் காவி பாசிச சக்திகள்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால் அது பாசிச சக்திகளின் வளர்ச்சியைத் தடைசெய்து தமிழகத்தினைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும்” என்று …

அதானிக்கு, எல்ஐசி, அள்ளிக் கொடுத்த தொகை ரூபாய் 5000 கோடி!

மோடியின் எஜமான் அதானியின்  கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒரு அங்கமான, அதானி போர்ட்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கடன் சுமையோ ரூபாய் 36,422 கோடி. இவற்றை, ஈடு செய்வதற்கு கடன் பத்திரங்களை வழங்கி நிதியை திரட்ட முயன்று வருகிறது 333.அதானி நிறுவனம். பங்கு மோசடி கதாநாயகன் அதானியின் யோக்கியதையை, நேர்மையை, நாணயத்தை அறிந்த எந்த நிதி நிறுவனமும்,…

கீழடி ஆய்வறிக்கை: மோடி-அமித்ஷா கும்பலுக்கு தெரிந்த பொய்களும், தெரியாத உண்மைகளும்

  சமீபத்தில் சென்னை வந்த ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர், அந்த ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில்…

குண்டுவைத்துக் கொலை செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காவி பயங்கரவாதிகள்!

2008-ஆம் ஆண்டு நவம்பரில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பிரயாக் சிங் தக்கூர் (இவர் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான அபிநவ் பாரத்-இன் தலைவர் மற்றும் பாஜகவின் முன்னாள் எம்.பி.) …