Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பில்கிஸ்பானு வழக்கின் கொலைக்குற்றவாளிகளை காப்பாற்றும் காவி பாசிஸ்டுகள்!

நீதிபதி ஜோசப்பின் அமர்வில்  இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 11 பேரின் விடுதலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். தற்போது வேறு அமர்வோ அல்லது வேறு நீதிபதியை கொண்ட அதே அமர்வோ இவ்வழக்கை விசாரிப்பதன் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு வேலைச் செய்திருக்கிறது.

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள்தண்டணை விதிக்கப்பட்ட 11 பேரை மோடி …

தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம் – 2023 :
இணையச் செய்தி ஊடகங்களை ஒடுக்கும்
மோடி அரசின் பாசிச தாக்குதல் – பாகம் – 1

சிலமாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிகார் தொழிலாளிகள் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டக் காணொளி இந்திய அளவில் பெரும் விவாதப்பொருளாகியது. இப்பிரச்சனையில், தேசிய ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி போன்ற மோடியின் ஜால்ரா செய்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான வன்மத்தையே செய்திகளாகப் பரப்பினர். பின்னர், இந்தக் காணொளி போலியானதென்று ஆல்ட் நீயுஸ் இணையதளம் கண்டறிந்து செய்தி …

குஜராத் படுகொலைக் குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவது ஏன்?

2002 குஜராத் கலவரத்தின் போது நரோதாகாமில் குறைந்தது 11 முஸ்லிம்களை படுகொலை செய்ததாக பாஜக–வின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் சங்கப் பரிவாரத்தின் ஒன்றான பஜ்ரங் தளத்தின் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 66 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு முன்பு விடுதலை செய்துள்ளது. குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிராக…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

இந்தியா என்ற நாடும், சத்தீஸ்கர் என்ற மாநிலமும் உருவாவதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஹஸ்தியோ அரந்த் எனும் மிக அடர்ந்த வனப்பகுதி, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் தாயகமாக இருந்து வந்திருக்கிறது. சத்தீஸ்கரின் மூன்று மாவட்டங்களான கோர்பா, சுர்குஜா மற்றும் சூரஜ்பூர் ஆகியவற்றில் சுமார் 1500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் இந்த வனப்பகுதி பரவியுள்ளது. பழங்குடி …

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசும், குஜராத் அரசும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆவணங்களை, ‘சிறப்புரிமையைக்’ காரணம் காட்டி, சமர்ப்பிக்க விரும்பவில்லை …

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என  சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி  தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள் எம்.எல்.எ மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிசத்…

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது.

ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தினார்கள். அதனைப் பயன்படுத்தி பாசிசப் படைகளைக் கட்டினார்கள். ஆதரவாளர்கள் மத்தியில் தனது …

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்கவிருக்கிறது. அம்மாநிலத்தில் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் ஒருவரை காவிக் கும்பல் கடந்த சனிக்கிழமையன்று அடித்துக் …

நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

 

 

கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்நிகழ்வின் இன்னொரு பகுதியாக, “சமீபத்தில், நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் (accountability)” …