Category காவி கார்ப்பரேட் பாசிசம்

காவி பாசிசத்தின் ஒடுக்குமுறை
இன்று ஜுபைர், நாளை?

பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் பரப்பும் பொய்யான தகவலை அம்பலப்படுத்துதல், மக்களிடம் பரப்பப்படும் இந்து மதவெறிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரே காரணத்திற்காக, ஒரு சாதாரண பத்திரிக்கையாளரை தன்னுடைய கொடூர சட்டங்கள் மற்றும் போலீஸைக் கொண்டு ஒடுக்க முயற்சிக்கிறது ஆதித்யநாத் அரசாங்கம். இதை காவி பாசிசம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

சரித்திரம் படைக்கிறார் மு.க.ஸ்டாலின்; பாஜக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்; இதைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்கிறது பாஜகவும் மோடி அரசும் எனத் துதிபாடுகின்றனர் திமுகவின் பாதந்தாங்கிகள். ஆனால் பாஜகவின் காவி கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து நடத்தும் பொதுக்கூட்டத்திற்குக் கூட அனுமதி தராமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடல் அரசின் யோக்கிதை.

அதானியைப் பாதுகாக்கும் காவி பா(சி)சம்!

ஒருபுறம் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக அதானியை மாற்றுவதற்காகவே புதிய திட்டங்களையும், சட்டத்திருத்தங்களையும் கொண்டுவருவது மறுபுறம் அதானி குழுமத்தின் குற்றங்களுக்கு உறுதியான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதானி என்ற கார்பரேட் முதலாளியைப் பாதுகாத்து வளர்க்கிறது மோடி தலைமையிலான காவிப் பாசிசக் கூட்டம்.

ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் பாஜகவும்,
பாசிச எதிர்ப்பு நாடகமாடும் இந்தியா கூட்டணியும்

இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளை பின்னின்று இயக்கும் நிதிமூலதன கும்பலின் முக்கியமான பிரதிநிதி அதானி. அதன் காரணமாகத்தான், உலகப் பணக்காரர்களின் வரிசையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த அதானி, பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், அபரிதமாக வளர்ச்சியடைந்து முன்னணியில் வந்து நிற்கிறார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அதானிக்கு வழங்கப்படுவதும், அதானிக்கு சாதகமாக சட்டங்கள் திருத்தப்படுவதும், சர்வதேச அளவில் அதானிக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுத்தர கென்யாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும், வங்க தேசத்திற்கும் மோடியே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதும் இதற்காகத்தான்.

அதானியே பாஜக, பாஜகவே அதானி!

மக்களின் உயிரை விட அதானின் நலனே பாஜக விற்கு முக்கியம். எனவே தான் நகரின் முக்கியப் பகுதியான தாராவியில் இருந்து மக்களை வெளியேற்றி மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத பகுதியில் அவர்களை குடியமர்த்த முயற்சிக்கிறது பாஜக. இதனை எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே மகாராஷ்ட்ரா சிறப்பு பொது பாதுகாப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தினை கொண்டுவந்துள்ளது பாஜக அரசாங்கம்.

பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

பாபர் மசூதி இருந்த இடம் தனக்கு வேண்டும் என்று கடவுளாகிய இராமபிரான் சந்திர சூட்டிம் கேட்க அதையே அவர் தீர்ப்பாக எழுதிவிட்டார். ராமனே தனக்காக சொன்ன தீர்ப்பு. சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகளும் செய்ததெல்லாம், சட்ட ரீதியான விளக்கங்களையும் மேற்கோள்களையும் கொண்டு ராமனின் விருப்பத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்திருப்பது தான்.

ஜனநாயக சக்திகளை
அழித்தொழிக்க அரைகூவும் அர்ஜுன் சம்பத்!
பாசிசக் கோமாளியின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்!

கம்யூனிஸ்டுகளையும், ஜனநாயக சக்திகளையும், பத்திரிக்கையாளர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும், அழித்தொழிக்கப் போவதாக பகிரங்கமாக மிரட்டுவதும், அவர்களைத் திட்டமிட்டு ஒடுக்குவதும் காவி பாசிஸ்டுகளுக்கு புதிதல்ல. இதனை அவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செய்துகொண்டுதான் வருகின்றனர்.

நோஞ்சான் சமூகத்தை உருவாக்கும் பாசிச மோடி அரசு

இந்தியக் குழந்தைகளில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள் என்பது நம் நாட்டின் எதிர்காலச் சந்ததியின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. தன் குடிமக்களுக்கு அதிலும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வழி செய்ய முடியாத ஒரு அரசு, தன்னை வல்லரசு என்றும், உலகத்திற்கே வழிகாட்டி என்றும் கூறிக்கொள்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் புல்டோசர்
நாளை பாசிசத்தை எதிர்ப்பவர்கள் மீது திரும்பும்

காவி பாசிஸ்டுகள் வெறுமனே இஸ்லாமியர்களின் வீடுகளை மட்டும் இடிக்கவில்லை; தில்லியில் சி.ஏ.ஏ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வீடுகளையும், ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்களின் வீடுகளையும், பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடுபவர்களின் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.

சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா?
தோழர். முத்துக்குமார் உரை

முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம்  அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார்.                 பாருங்கள்!!               …