குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
பிரச்சார வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! 

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். அமலாகிவருகிறது. உண்மையில், இப்போது நமது நாட்டில் அமலாவது எஸ்.ஐ.ஆரே அல்ல; கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், உரிமைக்காகப் போராடும் மக்கள், இசுலாமியர்கள், பத்திரிக்கையாளர்கள், பகுத்தறிவாளர்கள் – ஒருவரியில் சொன்னால் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் – அனைவரின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் சதித்திட்டமாகும்! 

மேற்கூறியவர்களின் “குடியுரிமையைப் பறிக்க வேண்டும்” “நாடு கடத்த வேண்டும்” என்பது காவி கும்பலின் நெடுநாள் கனவாகும். ஹெச்.ராஜா போன்ற பாசிஸ்டுகள் பா.ஜ.க.வை எதிர்த்துக் கேள்வி கேட்டாலே “பாகிஸ்தானுக்கு போ” என்று சொல்வதைக் கேட்டிருப்பிர்கள்! அதுசட்டப்பூர்வமானால் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்! அதுதான் என்.ஆர்.சி.!! 

இந்த என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்தி மேற்கூறிய பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் அனைவரையும் கண்டறியவும், களையெடுக்கவும், முகாமில் அடைக்கவுமே பா.ஜ.க. கும்பல் சதித்தனமாக முயன்றுவருகிறது. நேரடியாக இதை அமல்படுத்தினால் எதிர்ப்புகள் வருமென்பதால், எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் கொல்லைப்புறமாக, குறுக்குவழியில் அமலாக்கிவருகிறது. 

இந்த உண்மைகளையும் நாடு இன்று எதிர்கொண்டுள்ள இப்பேரபாயத்தையும் எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து வழங்குகிறது, இச்சிறுவெளியீடு! இவ்வெளியீடு, எஸ்.ஐ.ஆர்., என்.ஆர்.சி, பற்றிய காவி பாசிஸ்டுகளின் பொய்களை ஆதாரப்பூர்வமாகத் திரைகிழிக்கிறது; பொய்யாலும் புரட்டாலும் குழப்பப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர்.இன் உண்மை நோக்கத்தையும் அதன் அபாயத்தையும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போலத் தெளிவாக விளக்குகிறது!  

மிகுந்த சிரமங்களுக்கும் செலவுகளுக்கும் இடையில் இச்சிறுவெளியீட்டைக் கொண்டுவந்துள்ளோம்; ஆதரவு தாருங்கள்! வாங்கிப் படியுங்கள்! இயன்றளவு பரப்புங்கள்! எஸ்.ஐ.ஆர்., என்.ஆர்.சி.யை எதிர்த்த இப்பாசிச எதிர்ப்புப் போரில் ஒரு ஆயுதமாக ஏந்திச் சுழற்றுங்கள்!!  

இவண், 
புரட்சிகர மக்கள் அதிகாரம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன