இனி இங்கு பட்டொளி வீசாது – கவிதை

 

 

நாளை
நாடே
சுதந்திர தினம்
கொண்டாடும்

கொடிகள் ஏற்றப்படும்

முடிச்சுகள் அவிழ்க்கப்படும்

அண்ணார்ந்துப் பார்ப்பீர்கள்
மலர்கள் கொட்டாது

உங்கள் முகங்களில்
மலங்கள் கொட்டும்

பட்டொளி வீசிப் பறக்கும்
உங்கள் போலிச்
சுதந்திர தினக் கொடியில்

உங்கள் கொள்கைகள்
முடைநாற்றமெடுத்து வீசும்

திராவிட மாடல்
திராவிடம்
சமூக நீதி
அப்பா
அத்தனையும்
புழுக்கள் ஏறி
துர்நாற்றம் வீசும்

சாமானியனின்
கடைசி நம்பிக்கை
நீதிமன்றம் என்கிறார்கள்

பாவம்…

அதிகாரவர்க்கத்தின்
காலில் படிந்திருக்கும்
கறையை அகற்றும்
சர்பெக்சல்
சலவைத்தூள் என்பது
புரியாமல்…

இரவோடு இரவாக…

போராட்டக் களத்திலிருந்து
தூய்மை பணியாளர்களை
போராட்ட ஆதரவாளர்களை
கண்காணிகளைக் கொண்டு
அடாவடித்தனமாக
சிறைப் பிடித்த நீங்கள்

யாருக்காக
நீதியைத்
தூய்மை செய்யப்
போகிறீர்கள்
மனு…நீதிகளே..?

தனியாருக்கு
எங்களை விற்பதுதான்
உங்கள் கொள்கை என்றால்
எங்களை ஆள்வதற்கு
நீங்கள் எதற்கு?

ஓட்டு கேட்டு
எங்கள்
கால்களை
பிடித்தப் போது
தேர்தல் வாகுறுதிகளை
அள்ளி விசியபோது
சந்தனமென்று
இருந்துவிட்டோம்

உங்கள் போக்கும்
நடவடிக்கைகளும்
எங்களுக்கு
பாடமெடுக்கிறது
அது சந்தனம் அல்ல
மலமென்று

இனி
உங்கள் கொள்கைகள்
வீதி எங்கும் நாறும்…

தேர்தல் ஆணையம்
சட்டமன்றம்
நாடாளுமன்றம்
போலீஸ்
நீதிமன்றம்
இவைகளை மட்டும்
ஏன்
உங்கள் கைகளில் வைத்து
வருடிக் கொண்டிருக்கிறீர்கள்

தனியார்மயங்களுக்கு
தாரை வார்த்து விட்டு
மெரினாவில்
நீங்கள்
நிம்மதியாக ஓய்வெடுங்கள்…

அவர்கள்
பார்த்துக் கொள்வார்கள்
அத்தனையும்…

இனி
சுதந்திர தினமும்
சுதந்திரக் கொடியும்
எங்களுக்கு
??????

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன