சிவகளை அகழாய்வு முடிவுகள்
காவி பாசிசக் கும்பலின் வேதகால
வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி!

அன்புக்குரிய மாணவர்களேகல்வியாளர்களேபொதுமக்களே

உண்மையான வரலாற்றை அழித்துதங்களது நலன்களுக்கு ஏற்றது போல் வரலாற்றைத் திருத்தி எழுதும் தந்திரம் பாசிஸ்டுகளுக்கே உரிய பொதுப் பண்பாகும். ‘இந்து ராஷ்டிரத்தை‘ கட்டமைக்கத் துடிக்கும் காவி கும்பல்வரலாற்றைத் தனது நோக்கத்திற்கு ஏற்பத் திருத்தி எழுதத் துடிக்கிறது  

அந்த வகையில் இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளியாகக் கூறப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தைவேதகால நாகரீகம் என்று புரட்டுகிறார்கள்வேதத்தில் சொல்லப்படும் பொய்யான சரஸ்வதி நதி இந்தப் பகுதியில் பாய்ந்தோடியதாகவும்அதனால் இதனை சிந்துசரஸ்வதி நாகரிகம் என்று அழைக்க வேண்டும் என்கிறார்கள்  

இப்படி ‘பழைமை வாய்ந்த வேத காலத்தில் கலைஇலக்கியம்விஞ்ஞானம்பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் ‘பாரத நாடு‘  செழித்தோங்கியதாகவும்அந்த செழிப்பை இந்தியா மீது படையெடுத்து வந்த  இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அழித்துவிட்டதாகவும் காவி கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறதுஅவ்வாறு அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட  ‘பொற்காலத்தை‘ மீண்டும் கட்டமைப்பதுதான் இலட்சியம்அந்த இலட்சியம் தான் ‘இந்து ராஷ்டிரம்‘ என்கிறது காவிக் கூட்டம்  

இந்த காவிக் கண்ணோட்டத்தில் பொய்யான வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளைத் தேட  இந்தியத் தொல்லியல் துறையையும் களமிறக்கிஇதற்கெனப் பல்லாயிரம் கோடிகளை செலவழித்து வருகிறது பாசிச கும்பல்  

ஆனால்சிவகளை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 5,300 ஆண்டுகால பழைமையான இரும்புப் பொருட்கள் காவிகளின் இந்தத் திட்டத்திற்கு நேரெதிரான வகையில் அமைந்திருக்கிறது  

சமீபத்தில் தமிழ்நாடு தொல்லியல்துறையால் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில்  மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளில் பல்வேறு இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளனஅவை கி.மு.3345 முதல் கி.மு.2953 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதுசிவகளை மட்டுமன்றி ஆதிச்சநல்லூர்மயிலாடும்பாறைகீழ்நமண்டி மற்றும் மாங்காடு என தமிழகத்தின் பிற தொல்லியல் அகழாய்வுத் தளங்களில் கிடைத்த இரும்புப் பொருட்களும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியான இரும்புப் பயன்பாடு இருந்திருப்பதை உறுதி செய்கிறது.   

இரும்புப் பயன்பாடானது விவசாய கருவிகள் உருவாக்கத்திலும் அதன் விளைவாக உற்பத்தி மற்றும் வணிக விரிவாக்கத்திற்கும் முக்கிய பங்காற்றியதுஇதன் தொடர்ச்சியாக இது நாகரிக சமூகத்தில் அரசு உருவாக்கத்திற்கு வித்திட்டது.  இதனால்இரும்புப் பயன்பாடு என்பது மனித நாகரீக வளர்ச்சியின் முக்கியமான மைல்கல்லாகும்  

இதற்கு முன்னர் வரை இந்தியாவில் இரும்பு பயன்பாடு கி.மு. 1300 ஆம் ஆண்டுகளில் இருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் உலக அளவில் கி.மு.2500 ஆண்டுகளில் தொடங்கியதாகவும் கூறப்படுகிறதுஆனால்சிவகளையில் கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகள் ஏற்கெனவே இந்திய அளவிலும்உலக அளவிலும் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் காலத்திற்கு முந்தையாதாக இருக்கிறது.  

செம்புப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான காலத்தில் தமிழகத்தில் இரும்புப் பயன்பாட்டைக் கொண்ட நாகரீகம் ஒன்று இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக  இந்த அகழாய்வின் முடிவுகள் கூறுகின்றன  

வேதகாலம்தான் இந்திய வரலாற்றின் தொடக்கம்” என்று காவிக் கும்பல் கட்டமைக்க முயலும் பொய்யான வரலாற்றுக்கு முற்றிலும் எதிரான உண்மை வரலாறு இதுவாகும் 

சிந்து சமவெளி நாகரீகமே வேதகால நாகரீகம்வேதகால மரபுதான் இந்திய மரபுவேத காலச்சாரம்தான் இந்திய கலாச்சாரம்வேதங்களில் இருந்துதான் இந்திய வரலாறு தொடங்குகிறது – என்ற காவி பாசிஸ்டுகளின் பிரச்சாரத்திற்கு எதிரானதாக இருகின்றனசிவகளை அகழாய்வு முடிவுகள் 

ஆனால்இந்த சிவகளை அகழாய்வு முடிவுகள் முற்று முழுதானவையல்லஅதேவேளையில் இந்திய வரலாற்றை செழுமைப் படுத்துவதற்கான பல்வேறு கதவுகளைத் திறந்திருக்கிறதுசெம்புக் காலம் அறியப்படாத நிலத்தில் எப்படி அதனினும் உயரிய இரும்புப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டன?  இந்த இரும்பு உருக்குத் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தோன்றி வளர்ந்தா அல்லது பிற பகுதிகளில் இருந்து இங்கே கொண்டுவரப்பட்டதாஇந்த கேள்விகளை முன்வைத்து இன்னும் தீவிரமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.  

சிவகளை பகுதியில் மட்டும் 500 ஏக்கர் பரப்பளவில் அடையாளம் காணப்பட்டுள்ள 3000 இடங்களில் இதுவரை 24 இடங்களில் மட்டுமே அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளனமற்ற இடங்களிலும் ஆய்வு செய்யப்படவேண்டும்சிவகளை மட்டுமன்றிதமிழ்நாட்டில் அகழாய்வு செய்வதற்காக கண்டறியப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடும் திறன் வாய்ந்த வல்லுநர்களும் வேண்டும்ஒன்றிய அரசின் நிதியுதவி இல்லாமல் இது சாத்தியமில்லை  

ஆனால்தாங்கள் கட்டமைக்க விரும்பும் பொய்களை தகர்த்தெறியும் உண்மையைக் கண்டறிய காவி கும்பல் நிச்சயம் விரும்ப மாட்டார்கள்அவர்கள் இந்த ஆய்வை ஊற்றி மூடவே நினைப்பார்கள்எனவேஇந்திய நிலப்பரப்பின் பன்முகத்தன்மை கொண்ட உண்மையான வரலாற்றை அறிய விரும்பும் அறிவுஜீவிகள்வரலாற்று ஆய்வாளர்கள்பேராசிரியர்கள்மாணவர்கள்பொதுமக்கள் ஆகியோருக்கு இந்த காவிக் கும்பல் இயல்பாகவே எதிரிகளாக இருக்கிறார்கள்இவர்களை முறியடிக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன