ஆணாதிக்கத் திமிரையும், ஏகாதிபத்திய நுகர்வு வெறியையும் ஒழிக்காமல், பாலியல் வன்கொடுமைக்கும், கொலைக்கும் தீர்வு இல்லை!

எமதருமை மருத்துவ மாணவர்களே,

கல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் மீது, பாலியல் வன்கொடுமை நடத்தி, அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து, கொடூரமான முறையில் கொன்றது, வெறிப்பிடித்த மிருகச் செயல் என்பதோடு, இவை, நிர்பயாவோடு மட்டும் நிற்கவில்லை. இன்று வரை நீடிப்பதோடுபச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இதை நடத்திய சஞ்சய்ராய் என்பவன், ஆண்ட்ராய்டு ஆபாச வீடியோக்களால் வெறியூட்டப்பட்டவன். இந்தக் கொடூர பேர்வழியைத் தண்டித்து நீதி வழங்கக் கோரியும், இதையொட்டி நடத்தப்பட்ட, மருத்துவமனை சூறையாடலைக் கண்டித்தும், 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்திய மருத்துவர் சங்கம் (ஐ.எம்.ஏ) அறிவித்து நடத்தியது. இதையொட்டி இதர அரசு – தனியார் மருத்துவமனை மருத்துவர்களும், தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதும், அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையின் எதிர் விளைவு என்பது எவராலும் மறுக்க முடியாது. இவற்றை, எவராலும் உணராமல், எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் இருக்கவும் முடியாது.

 

 

இத்துடன், அன்றாட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகிவிட்ட இக்கொடுமைக்கு, கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ், நடிகை சனம் ஷெட்டி போன்றவர்கள் கூறுவது போல, அவரவர் வீட்டு ஆண்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பது ஒரு வேலை சரியாக இருந்தாலும், அதுவே தீர்வாகி விடாது. ஏனெனில், நச்சுத் தன்மையைக் கொண்ட ஏகாதிபத்திய நுகர்வு வெறியை, இணையவழி ஆபாச வீடியோக்கள் மூலம் பரப்பி, சஞ்சய்ராய் போன்ற ஆண்களை, இளம் பருவத்தினரைச் சீரழித்து, சமூக ஒழுக்கக் கேட்டை உருவாக்கி வருகின்றனர். எனவே, இக்கேடுகெட்டப் பேர்வழிகளையும், பெண்களை போகப் பொருளாக்கி காசாக்கும் முதலாளித்துவ பாலியல் சுரண்டலையும்இவர்களுக்கு ஏதுவாகஅனைத்துக் கட்சிகளின் அங்கீகாரத்துடன் நடந்துவரும் தாராளமய – உலகமயத்தையும்இதற்கெல்லாம் அடிநாதமாக விளங்கும் ஆணாதிக்கத் திமிரையும்ஏகாதிபத்திய நுகர்வு வெறியையும் சேர்த்துத் துடைத்தெறியும் ஒரு உக்கிரமான போராட்டத்தை நடத்த வேண்டும். மேலும்பாலியல் வன்கொடுமை நடந்தேறும் அனைத்து தனியார் துறைகளிலும்அரசு – பொதுத் துறைகளிலும்சமூகத்திலும் இப் போராட்டத்தை நீட்டிக்க வேண்டும். இல்லையேல்ஒருபோதும் பாலியல் வன்கொடுமைகளையும்இதையொட்டி நடந்தேறும் கொலைகளையும் தடுக்க முடியாது.

இதைவிடுத்து,கூட்டு பாலியல் வன்கொடுமையையும்கும்பல் கொலைகளையும் அன்றாடம் நடத்திவரும் காவிகளைமல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண்சிங் போன்ற காலிகளை வளர்த்துவரும் பாசிச ஆர்.எஸ்.எஸ்பாஜகமோடி – நட்டா கும்பலிடம் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மண்டியிடுவதுகசாப்புக்காரனிடம் அடைக்கலம் கேட்ட கதையாகத்தான் முடியும். அதேபோல, எதிர்க்கட்சிகள், ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் தொடரும்போது, இவர்களிடம் மீண்டும், மீண்டும் மன்றாடுவது முட்டாள்தனம். மாறாக, உங்கள் (மருத்துவர்கள்) சேவையின் மகத்துவத்தைஉங்கள் வலியின் கொடுமையை உணரும்இதர பிரிவு மாணவர் – இளைஞர் –  மக்களிடம் பிரச்சாரத்தை வீச்சாகக் கொண்டு செல்வோம். தனிமரம் தோப்பாகாது என்கிற வகையில்தனித்து நின்றுப் போராடுவதைத் தவிர்த்துஇதர அனைத்துப் பிரிவினரிடமும் இணைந்துப் போராடுவதை வழக்கப்படுத்திக் கொள்வோம்.

இதற்கேற்ப பிரச்சாரத்தை, பள்ளி – கல்லூரி –  குடியிருப்பு – அலுவலகம் தொழிற்சாலையென அனைத்து இடங்களிலும் விரிவுப் படுத்துவோம். இந்த வலியின் கொடுமையை உணர்ந்துநம் பின்னே மேற்கண்ட பிரிவு மக்கள் அணிவகுத்து வருவார்கள். அவர்களின் அரவணைப்போடுநம் மனவெழுச்சியை மக்கள் எழுச்சியாக மாற்றுவோம். நடைமுறையேஉரைகல் என்ற வகையில்மாற்றமும் நிச்சயம் நிகழும்.

  • மோகன்

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. தஞ்சை பாப்பநாட்டில் கூட்டுபாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் கஞ்சா குடித்துள்ளனர். மேலும் அரசு மருத்துவர் மருத்துவம் பார்க்காமல் தட்டிகழித்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் அலைகழித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளி ஒன்றில் என்சிசி என்ற பெயரில் அனுமதி இல்லாமலே முகாம் நடத்தியுள்ளனர். இதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. மொத்த த்தில் பார்க்கும்போது அரசே முதன்மை குற்றவாளியாக இருக்கிறது. ஆகவே இந்த அரசு கட்டமைப்பிடம் தீர்வு இல்லை. மக்கள் ஒன்று பட்ட போராட்டமே தீர்வு