கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி!
புரட்சிகர மக்கள் அதிகாரம் – கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலி!
சாராயபோதைக்கு மக்களை அடிமையாக்கிய அரசே குற்றவாளி
என்ற முழக்கத்துடன்  தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக 21-06-2024 அன்று காலை 11.00 மணிக்கு, கள்ளக்குறிச்சியில் விசச்சாராய மரணங்களுக்கு காரணமான அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அனுமதி கோரியபோது அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்துக்கு தடைவிதித்தது கடிதம் கொடுத்தது பென்னாகரம் போலிசு. எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது பென்னாகரம் வட்டார துணை செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர் சிவா, மாநில இணை செயலாளர் தோழர் கோபிநாத் கண்டன உரையாற்ற பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் சத்தியநாதன் நன்றியுரையாற்றினார்.
இறுதியில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக வழக்கு போட 15 தோழர்களின் பெயர்களை கேட்டு பெற்று சென்றுள்ளது, பென்னாகரம் போலிசு. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை தடுக்க வக்கற்று அவர்களுக்கு உடந்தையாக இருந்த கொலைகார அரசு, போராடுபவர்களின் மீது வழக்கு போடுவதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு!
மூடு டாஸ்மாக்கை என்று 2015 போராடி தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளை மூட போராடி இன்று வரை வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கும் எமக்கு இன்னுமொரு வழக்கு இது. வழக்கை கண்டு அஞ்சாமல் போராடுவோம்! போதை அற்ற சமூகத்தை உருவாக்க வீதியில் இறங்குவோம்!
தகவல்
தோழர் சத்தியநாதன்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
வட்டார செயலாளர்
பென்னாகரம்
9790138614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன