பென்னாகரம்
பிப்ரவரி 16 – 2024 நாடு தழுவிய தொழிலாளர்கள் – விவசாயிகள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பென்னாகரம் இந்தியன் வங்கி முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக நேற்று (16.2.2024) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் கோபிநாத் மாநில இணைச்செயலாளர் அவர்கள் கண்டன உரையாற்றினார். காவி- கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை போல் களப் போராட்டங்களை நாம் கட்டியமைக்க வேண்டும் என்பதை விளக்கி பேசினார்.
தர்மபுரி
பிப்-16, 2024 அன்று நாடு தழுவிய மற்றும் மறியல், வேலை நிறுத்தம் போராட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி BSNL அலுவலகத்தில் இருந்து பேரணி துவங்கி தர்மபுரி தலைமை தபால் நிலையம் முற்றுகை, மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம்
CITU. AITUC. LPF.INTUC. HMS.AICCTU மற்றும் SKM ஆகியோர் கூட்டாக மறியல் செய்தனர்.