நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

ஒரு முஸ்லீம் ஆண் தனது இந்து காதலியை வெட்டிக் கொன்று விட்டான் என்ற கோணத்தில் சாரதா வால்கர் கொலையை செய்தி-சமூக ஊடகங்களில் காவி கும்பல் பரப்பியது. இதன் பிறகுதான் மதம் மற்றும் சாதிகளுக்கு இடையேயான திருமணங்களைக் கண்காணிக்க மகாராஷ்டரா அரசு ஒரு குழுவை அமைத்தது. எனவே, இனி மாற்று மதம், மாற்று சாதிகளுக்கு இடையே நடக்கும் திருமணங்களில் காவிக் கும்பல்களின் பஞ்சாயத்துக்களும், கலவரங்களும் நடைபெறுவது திண்ணம்.

காவி பாசிஸ்ட்டுகள் தங்களது இந்து மதவெறிப் பிரச்சாரத்தை பல அமைப்புகளைக் கொண்டு அதற்கான செயல்திட்டங்களின் துணையோடு  (மதக் கலவரங்களிலிருந்து சமய வகுப்புகள் வரை) செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு விஎச்பி என்றால் ஆதிவாசி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு வனவாசி கல்யாண் ஆசிரமம்; அகோரிகளுக்கும் பார்ப்பன சாமியார்களுக்கும் ஒரு அமைப்பென்றால் கோயில் பூசாரிகளுக்கு கிராம பூசாரிகள் சங்கம்; இந்து மதத்தை விமர்சிப்பவர்களைக் கொல்வதற்கு சனாதன் சன்ஸ்தா என்றால் இந்து மத விமர்சனப் புத்தகங்களை தடைசெய்வதற்கு சிக்க்ஷா பச்சோ அந்தோலன் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தன்னுடைய பாசிசக் கருத்தை ஏறுக்கொள்ளச் செய்வதும் எதிர்ப்பவர்களை ஒழித்துக் கட்டுவதும் என ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர்.

முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ வெறுப்பு, வேத கால பெருமைகள், இந்து தேசவெறி ஆகியவையே இவர்களின் மைய அரசியல். இவர்கள் எடுக்கக்கூடிய பிரச்சனைகளை அரசியல் தளத்தில் முன் தள்ளுகின்ற அமைப்பாக பாஜக என்ற கட்சி உள்ளது. இவ்வமைப்புகளனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தில் இயங்குபவை. ஆர்.எஸ்.எஸ்-க்கு பல தலைகள் இருந்தாலும் அவையனைத்தும் ஒரே மூளையால் சிந்திக்கக் கூடியவை. இவ்வமைப்புகளே பாஜக-வின் தேர்தல் வெற்றிக்கும் மத முனைவாக்கத்திற்கும் அடிப்படையாகும். 

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களின் அட்டுழியங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இவர்களுக்கு ஒன்றிய மோடி அரசின் ஆதரவு எப்போதும் உண்டு. இவ்வமைப்புகளின் முன்னணியாளர்களின் சமூக வலைதளப் பக்கங்களை மோடியே பின் தொடர்கிறார் என்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

மேலும் கடந்த மாதத்தில் இந்தியா முழுவதும் இந்தக் காவி வானரக்கூட்டங்கள் செய்த அட்டுழியங்கள் சிலவற்றை வாசகர்கள் புரிதலுக்காக கீழே தருகிறோம். 

கர்நாடகாவில் ஹிந்து ஜாக்ருதி சேனை என்ற வானரப்படைக் கூட்டம் அவ்வளவு பிரபலமானது கிடையாது. அவர்களின் முகநூல் பக்கத்தை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பின்தொடருகின்றனர். இந்த அமைப்பு சாதாரண சூழ்நிலையில், ரயில் நிலையத்திற்கு பச்சை நிறம் அடித்திருப்பதால் அது மசூதி போலத் தெரிகிறது எனவே அதன் நிறத்தை மாற்ற வேண்டும் என்று கோரினால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் மோடியின் ஒரே இந்தியாவில் இது போன்ற சிறு சிறு வானரக்கூட்டங்களே அரசின் முடிவுகளை தீர்மானிக்கின்றவர்களாக மாறியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தின் வடக்கு நகரமான கல்புர்கியின் பிரதான இரயில் நிலையத்திற்கு பச்சை நிறம் பூசப்பட்டிருந்தது. இது ஒரு மசூதி போல் தெரிகிறது அதனால் ரயில் நிலையச் சுவரின் நிறத்தை மாற்ற வேண்டும் என்று ஹிந்து ஜாக்ருதி சேனை போராட்டம் நடத்தியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு கல்புர்கி இரயில் நிலையம் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்று அழைக்கப்படும் மிகவும் பிரபலமான இந்து அடிப்படைவாதக் குழு, ஹலால் சான்றிதல் பெற்ற உணவு மீதான தடை மற்றும் “லவ்-ஜிஹாத்-எதிர்ப்பு போலீஸ் படை” உருவாக்குவதற்கான சட்டத்தினை கொண்டுவர வேண்டும் என்று அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கோரிக்கை வைத்தது. இதன் விளைவாக ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருள்களை தடை தடைசெய்யும் வகையில் தனி நபர் மசோதாவை சட்டசபையில் அறிமுகப்படுத்தப் போவதாக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியுள்ளார்.      

 

                  

கடந்த மாதம், மைசூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தக் கட்டிடத்தின் மேல் பகுதி டூம் வடிவில் இருப்பதால் அது மசூதி போல் தெரிவதாகவும் அதனை இடிக்க வேண்டும் என்று பாஜக எம்பி ஒருவர் பிரச்சனையைக் கிளப்பினார். உடனே, தேசிய நெடுச்சாலைத் துறை மைசூரு நகர நிர்வாகத்திற்கு ஒரு வாரத்திற்குள் டூம் வடிவத்தை அகற்றுமாறு கடிதம் எழுதியது. பதினைந்து நாட்களுக்குள் டூம் வடிவம் மறைந்து விட்டது.  வரும் மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள கர்நாடகா மாநிலத்தில்  மத முனைவாக்கத்திற்கான வேலைகளுக்கு ஆளும் பாஜக தரப்பு ஆதரவு அளித்து வருகிறது. இதனால் முஸ்லீம் பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது ஒருங்கிணைந்த முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பெங்களூருவில் உள்ள கிறிஸ்தவர்கள் கரோல் பாடுவதற்கு போலீஸ் பாதுகாப்பை நாடும் நிலை உருவாகியுள்ளது. குஜராத், உத்ரகாண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் நடந்த கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களில் காவி கும்பல்கள் ரகளை செய்துள்ளனர். உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தகாசி மாவட்டத்தின் சீவாலா கிராமத்தில் நடந்த ஜெபக் கூட்டத்தில் பாதிரியார் உட்பட பல கிருஸ்துவர்களை வி.எச்.பி குண்டர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அத்தோடு மட்டுமில்லாமல் இவர்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கையும் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் உத்திரகாண்ட் மாநில பாஜக அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்தது. அதில் மூன்று வருடமாக இருந்த தண்டணையை பத்து வருடமாக அதிகரித்துள்ளது.  

 

 

அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில், சாரதா வால்கர் என்ற இளம்பெண் தனது காதலனால் கொலை செய்யப்பட்டார். இதேபோன்ற நிகழ்வு இனி நடக்காமல் இருக்க, மிகவும் ‘முற்போக்கான’ ஒரு திட்டத்தை அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. மதம் மற்றும் சாதிகளுக்கு இடையேயான திருமணங்களைக் கண்காணிக்கவும் ஒருவேளை அத்தம்பதிகள் பிரிந்திருந்தால் அப்பெண்ணின் தாய்வழிக் குடும்பங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா தலைமையில் மதம் மற்றும் சாதிகளுக்கு இடையேயான திருமண-குடும்ப ஒருங்கிணைப்புக் குழு (மாநில அளவில்) அமைத்துள்ளது. சாரதா வால்கரின் காதலன் ஒரு முஸ்லீம். ஒரு முஸ்லீம் ஆண் தனது இந்து காதலியை வெட்டிக் கொன்று விட்டான் என்ற கோணத்தில் இந்நிகழ்வை செய்தி-சமூக ஊடகங்களில் காவி கும்பல் பரப்பியது. இதன் பிறகுதான் மதம் மற்றும் சாதிகளுக்கு இடையேயான திருமணங்களைக் கண்காணிக்க மகாராஷ்டிரா அரசு குழுவை அமைத்தது. எனவே, இனி மாற்று மதம், மாற்று சாதிகளுக்கு இடையே நடக்கும் திருமணங்களில் காவிக் கும்பல்களின் பஞ்சாயத்துக்களும், கலவரங்களும் நடைபெறுவது திண்ணம்.             

 

         

மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ஷாருகானின் பதான் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் கதாநாயகி காவி நிறப் பிகினி உடையணிந்து வருவதை வைத்து பிரச்சனையைக் கிளப்பினார். உடையின் நிறத்தை மாற்றவில்லை என்றால் மத்தியப் பிரதேசத்தில் இப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.    

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன