காவி பாசிச ஆதரவாளர்களுக்குப் பிணை,
ஜனநாயக சக்திகளுக்குச் சிறை
உச்சநீதிமன்றத்தின் பாசிசப் பாசம்

காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பலரும் நீதித்துறையையே தங்களது புகலிடமாகக் கொண்டிருக்கின்றனர். காவி பாசிச சக்திகள் இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியும் என அவர்கள் மக்களை நம்பவைக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி தற்போது பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் …









