Category காவி கார்ப்பரேட் பாசிசம்

வரலாற்றுப் புரட்டுகளே காவி பாசிஸ்டுகளின் அடிப்படை

சாகாக்கள் மற்றும் பைடக்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் பேசிவந்த புனைவுக் கதைகளையும் தாண்டி தற்போது பொய்யான வரலாற்றை உருவாக்கி இந்துத்துவா முலாம்பூசி அதற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மதவெறி ஊட்டுகின்ற வேலையை செய்துவருகின்றது ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல்.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் புதிய கூடாரமே நாடாளுமன்றம்

    பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தனது சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புமுறையை “ஜனநாயக ஆட்சி முறையின் ஆன்மா” என்றும், ஜனநாயகத்தின் கோயில்” என்றும், “மக்களுக்கான மன்றம்” என்றும் கடந்த மே 28-க்கு முன்புவரை இந்திய நாடாளுமன்றவாதிகளால் அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இந்திய நாடாளுமன்றம் செயல்பட்டிருந்தால் கடந்த 75 ஆண்டுகளில் ஆகப்…

பில்கிஸ்பானு வழக்கின் கொலைக்குற்றவாளிகளை காப்பாற்றும் காவி பாசிஸ்டுகள்!

பில்கிஸ்பானு வழக்கின் குற்றவாளிகளுக்கு, குஜராத் அரசின் ஆதரவு, முழுமையான பொருளாதார மற்றும் சட்ட உதவிகள், சிறையில் ராஜகவனிப்பு என ஆர் எஸ் எஸ்-பாஜக வின் பேராதரவோடு உள்ளனர். கடந்த 15 வருட சிறைதண்டனையில் 3 வருடம் பரோலில் இருந்துள்ளனர். இதிலிருந்து குஜராத் அரசு, இக்குற்றவாளிகளை கையாண்ட விதத்தை நாம் புரிந்துகொள்ளலாம்

தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம் – 2023 :
இணையச் செய்தி ஊடகங்களை ஒடுக்கும்
மோடி அரசின் பாசிச தாக்குதல் – பாகம் – 1

இச்சட்டத்திருத்தத்தின் மூலம், எது சரி எது போலியானது என்பதை தீர்மனிக்கும் முழு அதிகாரத்தையும் மோடி அரசு தனக்குத் தானே கொடுத்துள்ளது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதே சட்டப்படியே குற்றமாகலாம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தனது அரசியல் லாபத்திற்காக கட்டவிழ்த்து விடும் பொய்களை இனி, சட்ட ரீதியாகவே உண்மையென மக்களிடம் பரப்ப முடியும்.

குஜராத் படுகொலைக் குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவது ஏன்?

2002 குஜராத் கலவரத்தின் போது நரோதாகாமில் குறைந்தது 11 முஸ்லிம்களை படுகொலை செய்ததாக பாஜக–வின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் சங்கப் பரிவாரத்தின் ஒன்றான பஜ்ரங் தளத்தின் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 66 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு முன்பு விடுதலை செய்துள்ளது. குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிராக…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின்  போராட்டம் வெறும் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல. அனைத்து ஓட்டுக்கட்சிகளின் துரோகத்திற்கும்,  நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையிடும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் மோடி அரசுக்கு எதிரான போராட்டமும் கூட.

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

இனப்படுகொலையில் ஈடுபட்ட, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த, பிஞ்சுக் குழந்தை உட்பட 7 பேரைப் படுகொலை செய்த கொடூர கொலைகாரர்கள் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என கூற முடியாது, அது எங்களின் ‘சிறப்புரிமை’ (privilege) என்று ஒன்றிய அரசும், குஜராத் மாநில அரசும் உச்சநீதிமன்றத்திலேயே கூறுகின்றன.

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என  சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி  தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள் எம்.எல்.எ மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிசத்…

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

இஸ்லாமிய சமூகத்தினரை துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் சித்திரவதை செய்வதற்கும் எந்த எல்லைக்கும் செல்ல, ஆளும் காவிகும்பல் தயாராகிவருகிறது.

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை நடத்தியே பாஜக வெற்றி பெற்றது. இம்முறையும் பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவேதான் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் தங்களது பாசிச நச்சு அரசியலைக் கையிலெடுத்துள்ளனர்.