Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பாக்ஸ்கான் வேதாந்தா சிப் தொழிற்சாலைக்கு தவம் இருக்கும் கார்ப்பரேட் அடிமை தமிழக அரசு

தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு வலியுறுத்தி நடந்த மக்கள் போராட்டத்தை, ஒடுக்குவதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 போராளிகளின் உயிரைப் பறித்தது இதற்கு முந்தைய அதிமுக அரசு. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இருந்த மனநிலையின் காரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாடெடுத்தது.

ஆனால் அதே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு …

ஊபா கைதுகள்: சட்டபூர்வமாக அரங்கேறிவரும் பாசிசம்

இம் என்றால் கைது உம் என்றால் சிறை என்று அரசின் ஒடுக்குமுறைக் குறித்து பரவலாக சொல்வதுண்டு. ஆனால் மோடி-அமித்ஷா கும்பலோ ஒருபடி மேலே சென்று தங்களது கருத்துக்களை ஏற்றுகொள்ளவில்லை என்றாலே NSA, UAPA போன்ற மிகக்கடுமையான சட்டங்களை  கொண்டு ஒடுக்கி வருகிறது.

நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை …

தனது கார்ப்ரேட் அடிமைத்தனத்தை மறைக்க பி.எஸ்.என்.எல். ஊழியர்களை மிரட்டும் அமைச்சர்.

ஒன்றிய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு “ஒழுங்காக வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுடன் நடந்த அலோசனைக் கூட்டத்தில்  “உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதனை  நீங்கள் செய்து முடிக்கவேண்டும். இல்லையென்றால் மூட்டையைக் கட்டுங்கள். சந்தேகமே வேண்டாம் இனி இதுபோன்ற முடிவுகள்…

5ஜி ஏலம் – தொலைதொடர்புத் துறையைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளின் கார்டல்

5ஜி அலைக்கற்றைகளை அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஏலம் முடிவடைந்துவிட்டது. 7 நாட்கள் 40 சுற்றுக்கள் நடந்த ஏலத்தில் மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அளவிற்கான அலைக்கற்றை, ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைத் தொகையாக 4.3 லட்சம் கோடி ருபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த அடிப்படைத் தொகையை விட மிகக் குறைவான விலைக்கு,…

அரிசிக்கும் ஜி.எஸ்டி., ஐ.சி.யூ.க்கும் ஜி.எஸ்.டி. – பாடல்

அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ள காவி கார்ப்பரேட் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக கொண்டு வரப்பட்ட பாடல்  …

முகமது ஜுபைர்: பாசிச ஒடுக்கமுறையின் சமீபத்திய இலக்கு

ஜுன் 27 ல் ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி G7 நாடுகள் சேர்ந்து வெளியிட்ட, கருத்துரிமை மற்றும்   பத்திரிக்கை சுகந்திரத்தை (online&offline) பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஆதரித்து  கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவிலும் கருத்துரிமை மற்றும் பத்திரிக்கை சுகந்திரம்(online&offline) பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நாளில்  பத்திரிக்கையாளரும் செய்திகளின்…

இந்துராஷ்டிரத்திற்குள் பழங்குடியினரை இழுக்கும் பாசக் கயிறு.

இந்தியாவின் 15வது அரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டுள்ளார். அரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, ஆரம்பத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்தது. முர்முவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தி, எதிர்க்கட்சிகள்…