Category காவி கார்ப்பரேட் பாசிசம்

சமஸ்கிருதத்தை விரட்டிய மெக்காலே கல்வி!

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், தங்களது காலனியாதிக்கத் தேவைகளுக்குச் சேவை செய்கின்ற வேலையாட்களை உருவாக்குவதற்காக அன்றைக்கு இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறையை மாற்றியமைத்தனர். காலனியாதிக்கவாதிகள் தங்களது நலனுகாக இந்திய கல்விச் சூழலை மாற்றியமைத்த போது, அது – சாதி அடிப்படையில் சமூகத்தின் பெரும்பான்மையோருக்குக் கல்வி மறுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி…

செத்த மொழியான சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்க்கும் மோடி அரசு!

“தமிழ் மொழிக்கு ஆதியும் அந்தமும் கிடையாது” இது கடந்த மே மாதம் மோடி சென்னை வந்த போது பேசியது. திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன்; தாய் மொழியில் பாடங்கள் இருக்க வேண்டும் போன்ற வாய்சவடால்களின் மூலம் தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டவர்களைப் போல பாஜக தலைவர்கள் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக இவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம்…

உயர்நீதிமன்ற மொழியாக தமிழை ஏற்க மறுக்கும் உச்ச நீதிமன்றமும் அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒன்றிய அரசும்

    சமஸ்கிருதம் தேவ பாஷை, அதிலிருந்து தோன்றிய இந்தி தேசிய பாஷை, ஆனால் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் சூத்திர, நீஷ பாஷைகள் என மொழியிலும் கூட ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒடுக்கியது பார்ப்பனியம். தமிழ் மொழியில் பேசினால் தீட்டாகிவிடும், மீண்டும் குளிக்க வேண்டும், என்ற காரணத்தால் மாலை குளியலுக்குப் பிறகு சமஸ்கிருதத்தில்…

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்றிடவே இந்தித் திணிப்பு

தங்களது இந்துராஷ்டிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காவி பாசிஸ்டுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றனர். சாதி/வர்ணப் படிநிலையைக் கொண்ட சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை, வேதங்களின்  அடிப்படையில் நீதி பரிபாலனை, புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மையெனக் கற்பிக்கும் கல்விமுறை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியா முழுமைக்குமான ஒரே கலாச்சாரம். இதுதான் காவிக் கும்பல் நிறுவத்துடிக்கும்…

மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆர்.என். ரவி, தான் போகும் இடமெல்லாம் இந்துத்துவ அரசியலை முன்னிறுத்திப் பேசுவதும் அதற்கு எதிர்ப்புகள் வருவதும் நாம் அறிந்ததே. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டையும் தாண்டி தேசிய ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை தாயாரித்த உரையை, ஆளுநரால் சரிபார்க்கப்பட்டு கையொப்பம் இடப்பட்டதை ஆர்.என். …

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

காவி பாசிஸ்ட்டுகள் தங்களது இந்து மதவெறிப் பிரச்சாரத்தை பல அமைப்புகளைக் கொண்டு அதற்கான செயல்திட்டங்களின் துணையோடு  (மதக் கலவரங்களிலிருந்து சமய வகுப்புகள் வரை) செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு விஎச்பி என்றால் ஆதிவாசி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு வனவாசி கல்யாண் ஆசிரமம்; அகோரிகளுக்கும் பார்ப்பன சாமியார்களுக்கும் ஒரு அமைப்பென்றால் கோயில் பூசாரிகளுக்கு கிராம பூசாரிகள் …

பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில்  பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க  விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்பு பசு வதை தடை உத்தரவு, மாட்டிறைச்சிக்கு தடை என  பாஜக  சட்டம் இயற்றியது.…

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது யார்?

 

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையை மீறி மோடியின் இராஜ தந்திரத்தின் காரணமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு பெரிய அளவில் நன்மை ஏற்பட்டிருப்பதாகவும் காவிக்கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததன் காரணமாக அம்பானி உள்ளிட்ட தரகு …

தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள்

சமீபத்தில் நடந்த வட மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் எதிரணியில் உள்ள அரசியல் தலைவர்களும் ஊடகங்களும், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுவதாக கூறுகின்றனர்.

அவர்களது வாதப்படி பாஜக இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது, தில்லி உள்ளாட்சித் …

100 நாள் வேலைத்திட்டத்தை ஊத்திமூட எத்தனிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு

நவீன தாராளவாத கொள்கைகளை கொண்டுவந்த போது அந்நிய முதலீடுகள் பெருகும் தொழில்துறை வளர்ச்சியடையும் இதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும், வாழ்க்கைத்தரம் உயரும் என்று கதையளந்தார் மன்மோகன் சிங்.

அனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மன்மோகன் சிங் சொன்னது பொய் என நிரூபனமானது. பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பெருகுவதோ, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றமோ ஏற்பட்டுவிடவில்லை மாறாக …