அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன், அதையே மையமாக வைத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய பாத யாத்திரை கிளம்பிவிட்டனர். …