தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
 தெருவில் இறங்கிப் போராடு! வெளியீடு

வெளிவந்துள்ளது: சிறுவெளியீடு  வாங்கிப் படியுங்கள்! பரப்புங்கள்!

 அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! 

“தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்: தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு” என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீட்டை எமது அமைப்புகள் சார்பாகக் கொண்டு வந்துள்ளோம்.  

எதிர்வரும் 2026 தேர்தலை ஒட்டி பல்வேறு நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கூட்டணி பேரங்கள், வாக்குறுதிகள், பணம், பரிசுப் பொருட்கள் – என வழக்கம்போல சகல ஓட்டுக் கட்சிகளும் மக்களை ஏய்ப்பதற்காக களத்தில் இறங்கிவிட்டனர். ஆனால், நாட்டையும் தமிழ்நாட்டையும் சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயமான காவி-கார்ப்பரேட் பாசிசம் குறித்து எந்தக் கட்சியும் வாய்திறப்பதில்லை; அல்லது சம்பிரதாயமாக முணுமுணுக்கின்றன.  

2021 சட்டமன்ற, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, “இது வழக்கமானதொரு தேர்தல் இல்லை; பாசிசம் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கான தேர்தல்” என்றெல்லாம் பேசிய ஓட்டுக் கட்சிகள், மா-லெ குழுக்களும் கூட இன்று சம்பிரதாயமாக இதைப் பேசி நிறுத்திக் கொள்வது என்றளவில் உள்ளனர்.  

ஆனால், உண்மையில் தமிழ்நாட்டில் காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் நாம் நினைப்பதைவிடத் தீவிரமாக வேலைசெய்து, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு பெரியார் மண், மதநல்லினக்கத்தைக் காக்கும் மண் என்பதையெல்லாம் முறியடித்து காவி விஷம் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் பரவி வருகிறது.  

இன்னொருபுறம், பாசிசத்தை உறுதியாக எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தி.மு.க. கடந்த ஐந்தாண்டுகளில் பாசிஸ்டுகளிடம் சமரசம் செய்து, சரணடைந்து, உடன்படிக்கைகளுக்கு வந்துள்ளது; பாசிச எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டே, பாசிச எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்து மழுங்கடிக்கும் வேலையை செவ்வனே செய்து வருகிறது.  

இத்தைய நிலைமைகளை விரிவாகவும் விவரங்களோடும் எடுத்துரைக்கிறது இச்சிறுவெளியீடு. தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, தேர்தல், இந்தியா கூட்டணிக் கட்சிகள் மீதான மாயைகளை உதறியெறிந்து, ஒரு மக்கள் படையாக ஒன்று திரண்டு பாசிசத்தை எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் விளக்குகிறது.  

வாங்கிப் படியுங்கள்! பரப்புங்கள்! 

இவண்,
தோழர் முத்துக்குமார்,
மாநிலச் செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 

நன்கொடை : ரூ. 20/- 

தொடர்புக்கு : 97901 38614, 90252 13374, 89030 42388 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன