தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் (பகுப்பாய்வு பணி நிபந்தனைகள்) சட்டம் 2021-க்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்குப் பாசிசம் மோடி அரசு ஒத்துழைக்காமல் வாய்தா என்ற பெயரில் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடையும் தருவாயில் இச்சட்டத்திற்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமென விசாரணையை மடைமாற்ற முனைந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் கே சந்திரன் அடங்கிய அமர்வு, இதை ஏற்காததோடு, இதன் செயல்பாட்டின் மீது அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு, விசாரணையை நவம்பர் 7ஆம் தேதி தள்ளி வைத்தது.
நவம்பர் 7ஆம் தேதியும் மோடி அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி நேரடியாக ஆஜராகவில்லை. மாற்றாக, தனது சகபாடி மூலம் நவம்பர் 10-ஆம் தேதி வழக்கு மீண்டும் தள்ளி வைக்கும் படி அமர்விடம் முறையிட்டுள்ளார். இதைக் கண்டித்த அமர்வுக்குழு “இந்த விசாரணை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இனியும் ஒத்தி வைக்கும்படி முறையிடுவது நியாயமற்ற செயல் என்றதோடு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வருகிற நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வுபெறுவதால், அதற்குப் பிறகுதான் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டுமென தாங்கள் விரும்பினால் அதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம்” என மோடி அரசின் உள்நோக்கத்தையும் உரித்துக் காட்டிவிட்டது. இறுதியாக வருகிற நவம்பர் 10-ஆம் தேதி மோடி அரசின் அட்டர்னி ஜெனரல் வேங்கட ரமணி வரவில்லையெனில் அன்றுடன் இவ்விசாரணை முடித்து வைக்கப்படும் என்று அமர்வுக்குழு அறிவித்துவிட்டது.
பாசிச மோடி அரசு, இந்த விசாரணையைத் தாமதப்படுத்துவதில், ஏன் இவ்வளவு முனைப்புக் காட்டுகிறது என்பதை முப்படைத் தலைமை தளபதி உருவாக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பாசிச நோக்கம் விளங்கிவிடும். அதாவது, நாடு போலி சுதந்திரம் அடைந்தது முதல், பாதுகாப்புத் துறையில் தரை – வான் – கடல் என்கிற வகையில் 3 பிரிவுகளாக ராணுவங்கள் இயக்கப்பட்டு வந்தன. பாசிசம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இவை மூன்றையும் இணைத்து, முப்படைக்கும் ஒரு தலைமை தளபதி பதவியை உருவாக்கியது. அதற்கு பிபன் ராபத்’தை நியமித்தது. இதன் மூலம் 3 துறையையும் ஒரே செயல் அதிகாரி பதவி (Executive) மூலம், (அதாவது, முடிவெடுக்கும் அதிகாரமுள்ள தலைமை தளபதி மூலம்) இயக்கவும், கட்டுப்படுத்தவும், அவரை தங்களது உத்தரவுக்குக் கீழ்ப்படியும், பாசிச செயல்பாட்டிற்கு ஆடும் குரங்காக உருவாக்கிக் கொண்டனர். பிபன் ராவத் இறந்ததையொட்டி, தற்போது, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முக்கிய ஆலோசகராக இருந்த அனில் சவுகானை நியமித்துக் கொண்டது.
இதே பாசிச நோக்கத்தைத் தீர்ப்பாயங்களிலும், திணிக்க வேண்டும் என்கிற அடிப்படையில்தான், காப்புரிமை – வர்த்தகம் – சுங்கம் – சினிமா போன்ற பல்வேறு தனித்தனி துறைகளில் ஏற்படும் நிர்வாகம் – வரி தொடர்பானச் சச்சரவுகளை விசாரித்து டன்த் தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களான தீர்ப்பாயங்களை நியமிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழுவில் ஒன்றிய அரசின் சார்பாக செயல் அதிகாரி ஒருவரைத் திணிக்க முயன்றது. ஆனால், தேர்வுக்குழு இதை நிராகரித்ததன் விளைவே விசாரணையை ஒத்திப் போடும் சதியை அரங்கேற்றி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, இந்தத் தீர்ப்பாயங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் நிரப்பப்பட்ட தேர்வுக்குழுவால் உருவாக்கப்பட்டவை. இவை சுயமாக, நிபுணத்துவத்துடன் இயங்கக் கூடியவை. நீதிமன்றங்களை விட அதிகமான வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்தும் வைத்துள்ளன. அதன் (நீதிமன்ற) சுமைகளைக் குறைத்தும் உள்ளன. இவ்வளவு சிறப்பாக செயல்படத் தீர்ப்பாயங்களை, தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம் 2021 மூலம் கலைக்கவும், அதன் வழக்குகள் முழுவதையும் இதர நீதிமன்றங்களுக்கு நேரடியாகக் கொண்டு வர வேண்டிய அவசியம் தான் என்ன?
தேர்வுக்குழுவால் உருவாக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயங்கள் முழுவதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றை தன் விருப்பப்படி கட்டுப்படுத்தவும், ஆட்டிப் படைக்கவும் மோடி அரசால் முடியவில்லை. இதையும் மீறி, தனது ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தேர்வுக்குழுவின் உறுப்பினர் நியமனத்தில் செயல் அதிகாரி மூலம் தலையிட்டது. இதைக் தேர்வுக்குழு ஏற்காததோடு, நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதால், அதன் சுதந்திரமான செயல்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதாலும் அதன் தலையீட்டைத் தடுத்து நிறுத்தியது. மேலும், இச்சட்டம் நீதித்துறையைச் சுதந்திரம் அதன் அதிகாரப் பிரிவினை அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாலும், தேர்வுக்குழு இவற்றை எதிர் எதிர்ப்பதற்கு, நிராகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
இவை அனைத்திற்கும் ஆப்பு வைக்கும் நோக்கத்தில், முப்படைத் தலைமை தளபதியைச் செயல் அதிகாரியாக நியமித்து ஒட்டுமொத்தப் பாதுகாப்புத் துறையையும் தங்களது (மோடி கும்பல்) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது போல, தேர்வுக்குழுவையும் செயல் அதிகாரி மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே, இச்சட்டத்தின் மீதான விசாரணையை முடிக்க விடாமல், உச்ச நீதிமன்ற அமர்வுக்குழு கூறுவது போல, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 23 முடியும் வரை, இந்த விசாரணையை இழுத்தடிக்க முனைகிறது மோடி அரசு. நவம்பர் 24-க்கு பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கப் போகும் தனது விசுவாசியானவரும், 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை உறுதி செய்தவரும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட செயல் அதிகாரியுமான சூரியகாந்த் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற பாசிச நோக்கத்தோடு, இழுத்தடிக்கும் சதிராட்டத்தை அரங்கேற்றி வருகிறது மோடி அரசு.
- மோகன்




