புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள “நிலை அறிக்கையில்” (status report) வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறது. இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. திமுகவின் எவ்வாறு நிலவுகின்ற உண்மைகளை மூடி மறைத்து ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக குற்றப்பத்திரிக்கையை உருவாக்கியுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்தக் காணொளி.