பத்திரிகை செய்தி!
புரட்சிகர மக்கள் அதிகாரம்
03-12-2024
அன்பார்ந்த ஜனநாயக சக்திகளே! பொதுமக்களே!
வணக்கம்!
புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் இரு மாதங்களாக இயக்கம் மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். இதன் இறுதி நிகழ்ச்சியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று கடந்த டிசம்பர்-01 அன்று தருமபுரியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் கடும் மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
அந்த பொதுக்கூட்டம் வருகின்ற டிசம்பர் 08 ஆம் தேதி நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பதை காலநிலை குறித்து நம்பகமான அறிவியல் பூர்வமான தகவல் அடிப்படையில் தெரிவிக்கிறோம்.
ஆகவே, பொதுமக்கள், ஜனநாயக சக்திகள் முன்னர் ஏற்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்திற்கு அணிதிரண்டு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தோழர்
இரா. முத்துக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614வ