“இன்று, இந்தியா ஒரு உணவு உபரி நாடாக உள்ளது. ஒரு கட்டத்தில், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு என்பது உலகளாவிய கவலையாக இருந்தது, இன்று, உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது.” இது, சென்ற வாரம் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச விவசாயப் பொருளாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் மோடி பேசியது.
இந்தியாவின் உணவு உற்பத்தியில், அரிசி மற்றும் கோதுமை மட்டுமே சந்தையின் தேவையை விட மூன்று மடங்கு அதிகமாக இந்திய உணவுக் கழகத்திடம் கையிருப்பு உள்ளது. இவ்விரண்டைத் தவிர பெரும்பான்மையான உணவுப் பொருள்கள் தேவைக்கேற்ப வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் பொருட்கள் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
உதாரணமாக உணவு எண்ணெய்களை எடுத்துக் கொண்டால், ஏறத்தாழ 65% இலிருந்து 70% வரை வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. 2022-23 ஆம் எண்ணை ஆண்டில் மட்டும் 1.38 லட்சம் கோடி அளவிற்கு எண்ணெய் வகைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய உணவு பொருள்கள் உற்பத்தி மற்றும் தேவையைக் குறித்த அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. அதில், பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளின் உற்பத்தி தேவையை விட குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அடுத்த 25 ஆண்டுக்கான (2047-48) இந்திய உணவு பொருள்களின் தேவையை கணக்கிட்டுள்ளது. அரசின் புள்ளி விவரங்களே மோடியின் வாய்சவடலை பொய் என்று தோலுரிக்கின்றன.
மோடி பெருமைப்பட்டுக் கொள்வதைப் போல, இந்தியா உணவு உபரி உள்ள நாடு என்பதை ஏற்றுக் கொண்டாலும் உலகளவில் அதிக பட்டினியாளர்கள் இந்தியாவில் தான் உள்ளனர்? உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 111 வது இடத்தில்(111/125)ச் உள்ளது. சமீபத்தில் வெளியான தேசிய குடும்ப செலவு கணக்கெடுப்பில் இந்திய அளவில் 46 சதவீத மக்கள் மூன்றுவேளை உணவில் ஒரு வேளை உணவு உண்பதில்லை என்று கூறுகிறது.
இந்தியாவின் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மோடி கும்பலால்(முதலாளிகளின் ஒரு பிரிவினராலும்) முன்னிறுத்தப்படும் குஜராத்தில் தான் அதிக அளவு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக நிதி ஆயோக் கூறியுள்ளது. சில வாரங்களுக்கு முன் வெளியான நிதி ஆயோக் அறிக்கையில், குஜராத்த்தில் 62.5% கற்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுடனும் ஐந்து வயதிற்கு கீழே உள்ள 40 சதவீத குழந்தைகள் எடை குறைபாடுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
சொந்த நாட்டு மக்கள் பட்டினியுடனும் ஊட்டச்சத்து குறைபாடுடனும் போதிய வளர்ச்சி இல்லாமல் இருப்பதும் தெரிந்தும் கூட உணவு தன்னிறவு என்று சர்வதேச முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் மத்தியில் மோடி வாய்சாவடால் அடித்திருக்கிறார். ஒருவேளை அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டவர்கள் தான் இந்திய மக்கள் என்று மோடி கருதி விட்டாரோ என்னவோ?
இந்தியா உலகத்திற்கே விஸ்வகுருவாக உள்ளது; பருவநிலை மாற்றம் பிரச்சனைகளுக்கு இந்தியாவால் தான் தீர்வு சொல்ல முடியும்; மோடி தலையிட்டால் ரஷ்ய-உக்கிரன் போரை நிறுத்த முடியும்; இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும்; இந்தியாவில் பொது கழிப்பிடங்களே என்பதே இல்லை; மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உணவு பட்டினியானது பெருமளவு குறைந்துள்ளது போன்ற வண்டி வண்டியாய் வாய் சவடால்களை சர்வதேச அரங்கிலும் இந்திய மக்களிடத்திலும் அள்ளி வீசுகிறார் பாசிஸ்ட் மோடி. இதை இந்திய ஆளும்வர்க்கமும் ஊடகங்களும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைக்கின்றன. “இந்தியா உபரி உள்ள நாடு” என்ற மோடியின் சமீபத்திய வாய் சவடால்களும் இதன் தொடர்ச்சியே. பொய்களை பரப்புவதும் வாய்சவுடால்களை அள்ளி வீசுவதும் பாசிஸ்ட்களின் இயல்பே. அவற்றை சரியான தரவுகளைக்கொண்டு அம்பலப்படுத்துவது மிக அவசியம்.
- அழகு
உணவு உபரி ஆனால் பட்டினி . இதுதான் பாசிசம் . தொடர்ந்து தரவுகளுடன் அம்பலபடுத்தும் செங்கனலுக்கு வாழ்த்துக்கள்.
எழுத்துப்பிழை: தன்னிறைவு