நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்!
ரசியப் புரட்சியின் 106 வது ஆண்டையொட்டி “காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! மக்கள் ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு.
ஓசூர்:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் போன்ற புரட்சிகர அமைப்புகளின் சார்பாக தமிழகம் தழுவிய நவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 106-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஓசூர் மாநகரம் பாகலூர் பகுதியில் புதிய ஜனநாயக கட்டிட தொழிலாளர் சங்கத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அச்சங்கத்தின் ஆலோசகர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நவம்பர்- 7 புரட்சியின் சாதனைகள் குறித்தும் இந்தியாவில் புரட்சியின் தேவையை குறித்தும் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இரா.சங்கர் விளக்கி பேசினார். அதன் பிறகு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட குழு தோழர். ஜெயராமன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.இறுதியாக இச்சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் மூர்த்தி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இவ்விழாவின் முக்கியத்துவத்தை விளக்கி பிரசுரம் கொடுத்து இனிப்பு வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கவனித்து பிரசுரத்தை வாங்கி படித்துச் சென்றனர் .
தகவல்:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.
****
கிருஷ்ணகிரி:
நவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 106ஆம் ஆண்டை ஒட்டி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்களின் சார்பாக நாட்ராம்பாளையம் பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் வட்டார செயலாளர் தோழர். ராமு தலைமை தாங்கினார், கொடியை தோழர்.அம்மாசி அவர்கள் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
தோழர்.ராமு, வட்டார செயலாளர்,
மக்கள் அதிகாரம், அஞ்செட்டி வட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்
9159264938.
****
தருமபுரி:
நவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 106 ஆம் ஆண்டை ஒட்டி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்களின் சார்பாக தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பென்னாகரம் பகுதி அண்ணாநகர் கிளையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் கிளை செயலாளர் தோழர்.சேட்டு தலைமை தாங்கினார், கொடியை தோழர்.பவுன்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
தோழர்.சிவா, வட்டார செயலாளர்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.
9159264938
****
நவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 106 ஆம் ஆண்டை ஒட்டி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்களின் சார்பாக தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பென்னாகரம் பகுதி கூத்தபாடி கிளையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் மண்டல செயலாளர் தோழர். ராஜா தலைமை தாங்கினார். தோழர். மாதப்பன் கொடியேற்றி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தோழர்.சிவா, வட்டார செயலாளர்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டம்,
தருமபுரிமாவட்டம்.
9159264938
தகவல்
தோழர்.சிவா, வட்டார செயலாளர்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டம்,
தருமபுரிமாவட்டம்.
9159264938
****
நவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 106 ஆம் ஆண்டை ஒட்டி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்களின் சார்பாக தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பென்னாகரம் பகுதி கரியம்பட்டி கிளையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் தோழர்.சிவா வட்டார செயலாளர் தலைமை தாங்கினார். தோழர். முத்துக்குமார் மாநிலச் செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் கொடியேற்றி ஏற்றி வைத்தார்.
தகவல்
தோழர்.சிவா, வட்டார செயலாளர்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டம்,
தருமபுரிமாவட்டம்.
9790138614
****
நவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 106 ஆம் ஆண்டை ஒட்டி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்களின் சார்பாக தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பென்னாகரம் பகுதி கள்ளிபுரம் மேற்கு கிளையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர் தோழர். குயில் தலைமை தாங்கி கொடியேற்றி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
தோழர்.சிவா, வட்டார செயலாளர்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டம்,
தருமபுரிமாவட்டம்.
9159264938
***
திருச்சி:
106 ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சி தினம் திருச்சி BHEC Training Centre Bus Stop பகுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தோழர் A.உத்திராபதி பொது செயலாளர் (திருச்சி மண்டலம்) தலைமையில் கொடியேற்றி, பரசுரம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.
8903042388.