கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி  28. 10. 2022 அன்று மாலை 5 மணிக்கு பாகலூர் சர்க்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இரா.சங்கர் தலைமை தாங்கினார். கண்டன உரையாக தோழர் சுந்தர் மாநிலச் செயலாளர், FITUC. தோழர் வனவேந்தன் மாவட்ட தலைவர், திராவிடர் தொழிலாளர் மற்றும் கட்டுமான சங்கம். தோழர் விக்னேஷ் மாவட்ட செயலாளர் தமிழ் தேசிய குடியரசு இயக்கம் தோழர் அபி கவுடா திராவிடர் சிட்டி மூமென்ட், தோழர் ரவிச்சந்திரன் சட்ட ஆலோசகர், புதிய ஜனநாயக கட்டிட தொழிலாளர் சங்கம். தோழர் கோபிநாத் மாநில இணைச் செயலாளர், மக்கள் அதிகாரம் மற்றும் மேலும் பல அமைப்புகளிலிருந்து வந்திருந்தவர்கள் கண்டன உரையாற்றினர்.

நிகழ்ச்சியின் இடையில் தோழர் சின்னசாமி தெலுங்கில் ஒரு புரட்சிகர பாடலை பாடினார். இறுதியாக இச்சங்கத்தின் பாகலூர் கிளை பொருளாளர் தோழர் எபினேசர் நன்றியுரை ஆற்றினார். பெரும்திரளாக தோழர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டர்.

 

தகவல்
தோழர் இரா.சங்கர்,
மாவட்டத் தலைவர்,
புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள்(பு.ஜ.க.தொ) சங்கம்.
கிருஷ்ணகிரி – தருமபுரி மாவட்டங்கள்.
9944474665.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன