கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் துறையில் தொடரும் இலஞ்ச ஊழல் முறைகேடு!

பல்லிளிக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு!

ஏழை எளிய மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு அரசு வழங்கும் உணவு பொருள் மிக மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் சில நல திட்ட உதவிகளை பெறவும் அரசு வழங்கும் குடும்ப அட்டை முக்கியமானது. ஆனால் அந்த குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் இலஞ்சப் பணம் கொடுத்தால்தான் குடும்ப அட்டைக்கு ஒப்புதல். இல்லை என்றால் இரண்டு ஆண்டுகள் ஆனாலும் குடும்ப அட்டைக்கு ஒப்புதல் தருவதில்லை என்பது போச்சம்பள்ளி வட்ட வழங்கல் துறையில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் நிலையாக உள்ளது.

போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர்.அண்ணாதுரை மற்றும் அவரது உதவியாளர் கோவிந்தராஜ். ஆகியோர் வேண்டுமென்றே இலஞ்சம் பெறும் பொருட்டு குடும்ப அட்டை வழங்குவதை ஏதோ ஒரு காரணம் கூறி நிராகரிக்கிறார்கள்.

தமிகத்தில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் மக்கள் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட்டும் என்று அறிவித்தார். கடந்த இரண்டு மாதங்குளுக்கு முன்பு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று கூறினார்.  அனால் இங்கு 200 நாட்கள் ஆனாலும் குடும்ப அட்டை கிடைப்பதில்லை. ஏதோ ஒரு காரணத்தை கூறி நிராகரிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து கண்டனங்கள் வந்த பிறகும் இந்த தவறு இந்த ஊழல் முறைகேடு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

மேலும் அண்ணாதுரை மற்றும் அவரது உதவியாளர் கோவிந்தராஜ். ஆகியோர் இருவரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுப்பதற்கான சோதனை என்ற பெயரில் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் ஆய்வு செய்து பின்னர் அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு திரும்பி வந்துவிடுகின்றனர். .   

கடந்த 22-07-2022 அன்று இரவு சுமார் 7.30 மணிக்கு போச்சம்பள்ளி வட்டம் ஜிங்கல்கதிரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அதிகாரி அண்ணாதுரை மற்றும் அவரது உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சேர்ந்து கிராமத்தில் ஆய்வு என்ற பெயரில் சென்று அங்கு உள்ள வீட்டில் அரசி இருப்பதாக கூறி மிரட்டி ரூ.85000 ஆயிரம் பணம் வாங்கி வந்துள்ளனர்.

ஒருவர் ரேஷன் அரிசி உள்ளிட்ட குடிமை பொருளை கடத்துகிறார் என்றால் உடனடியாக குடிமை பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கொடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அனால் இவர்கள் இதை செய்யாமல் மிரட்டி லஞ்சம் பெறும் கிரிமினல்தனத்தையே ஒரு தொழிலாக செய்து வருகிறார்கள். இது சம்மந்தமாக பல முறை கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

கடந்த 8 ஆண்டுகளாக போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இலஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்து எந்த துறை மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தது இல்லை. எனவே இது சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். கடந்த 2020 நவம்பர் மாதம் சென்னை உயர் நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ‘’வட்டாட்சியர் அலுவலகங்களில் எந்த ஒரு சான்றிதழுக்கும் 100 ரூபாய் கூட இலஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற முடிவதில்லை. இதனால் ஏழைகள் மிகவும் பாதிக்கபடுகிறாகள். இலஞ்ச ஒழிப்புத் துறை தானாக முன்வந்து அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி ஊழல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்’’ என்று குறிப்படப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை இது போன்ற அதிகாரிகள் கழிப்பறை காகிதமாகவே கருதுகின்றனர். நீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் எந்த அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. அநீதிகளை தட்டிக்கேட்கும் போராட்டக்காரர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்கிறது போலிசு. அதை எந்த ஆட்சேபனையும் இன்றி நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் தனது உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றங்கள் கண்டும் காணாமல் உள்ளன. நீதிமன்றம் உட்பட அரசின் அனைத்து உறுப்புகளும் தங்களுக்கு உரிய கடமைசெய்யாமல் தோற்றுபோய் விட்டன. ஆகவே, மக்கள் இந்த அநீதிகளுக்கு எதிராக அமைப்பாய் திரண்டு போராடும் போதுதான் லஞ்ச ஊழல் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்த முடியும்.

இப்படிக்கு
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.
97901 38614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன