23.08.2022 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலத்தில் அனுமதி கொடுத்துவிட்டு பின் தடாலடியாக கைது செய்தது. தருமபுரியிலும் அனுமதி கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டத்தை ஒட்டி 40 பேர் மீது பொய் வழக்கை தர்மபுரி போலீஸ் போட்டுள்ளது. மத்திய அரசு வரியை விதித்து மக்களின் வயிற்றில் அடிக்கிறது என்றால், மாநில அரசு பொய் வழக்குப் போட்டு மக்களின் உரிமையைப் பறிக்கிறது. திமுக அரசு போடும் பொய் வழக்கை வன்மையாக கண்டிக்கின்றோம் திமுக அரசு உடனடியாக இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும்.
தகவல்.
முத்துக்குமார்.
மாநிலச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு 9790138614