தருமபுரி மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் அருகில் 31.07.2022 அன்று காலை 11 மணிக்கு ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒராண்டாக நடைபெற்ற நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தின் இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்ப பெற்றது. அப்போது விவசாயிகளின் விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி 15, 2022 ஆம் தேதிக்குள் சட்டம் இயற்றுவதாக ஒன்றிய விவசாய அமைச்சர் நரேந்திர தோமர் கைப்பட கடிதம் எழுதி கொடுத்தார். ஆனால், இன்று வரை அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

அதே போல் அந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் இறந்தனர். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.

இதை கண்டித்து நாடு முழுதும் இன்று சாலை மறியல் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் அர்ச்சுணன் அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் மற்றும் சிபிஐ எம்எல் லிபரேஷன் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி தோழர் மல்லையன் நன்றியுரை ஆற்றினார். இதில் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

தகவல்
மக்கள் அதிகாரம்
தோழர் முத்துக்குமார்
மாநில செயலாளர்,
தமிழ்நாடு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன