வல்லரசாக வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறும் நமது நாட்டில்தான் கடந்த பல ஆண்டுகளாக சுடுகாடு வசதி இல்லாமல் பிணங்களை எரிப்பதும், புதைப்பதும் சாலை ஓரமே நடைபெற்று வருகிறது. இது குறித்து ஊர் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், போராடியும் வந்துள்ளனர். ஆனால் அரசோ கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.
முதலாளிகள் நலன் என்றால் ஓடோடி சேவை செய்யும் அரசும், அதிகாரிகளும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், சுடுகாடு போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வருவதில்லை. மனு கொடுத்தாலும் அரசு அதிகாரிகள் வாங்கிக் கொள்வது பிறகு கண்டு கொள்ளாமல் மனுக்களை அலமாரியில் வைத்து பாதுகாக்கின்றனர். இப்படி பல ஆண்டுகளாக போராடிய பிறகு சுடுகாடு பிரச்சனையை தீர்த்து கொடுப்பதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புறம்போக்கு நிலத்தினை அரசு அதிகாரிகள் அளந்து அத்து காட்டினார்.
ஆனால் இதுவரை அந்த நிலத்திற்காக பாதையை ஏற்பாடு செய்து தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். மனு கொடுக்கும் போது பிரச்சனைக்குறிய இடத்திற்கு வந்து பார்ப்பது பிறகு கிடப்பில் போடுவது என்பதுதான் மாவட்ட நிர்வாகத்தின் சடங்குதனமான வேலையாக உள்ளது.
இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் கூத்தப்பாடி கிளை சார்பாக கையெழுத்து இயக்கம் எடுக்கப்பட்டு, இன்று 27/7/2022 பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைவாக சுடுகாடு பிரச்சனையை தீர்த்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
தகவல்
தோழர். முத்துக்குமார்
மாநிலச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
9790138614