Category காவி கார்ப்பரேட் பாசிசம்

மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் என்பது ஒரு வெற்று இடம் இல்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அடையாளம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திய மேலாண்மையின் குறியீடு.  இத்துறைமுகம் வாயிலாகவே அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய முதலாளிகளின் சரக்குகள் கையாளப்படும். இதற்காக இந்திய கார்ப்பரேட் முதலாளியான அதானியும், நாட்டின் பிரதமர் மோடியும்  கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்!

    கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு மாநில தோல்விக்கே இந்த கலவரக் குரல் என்றால் நடைபெறவிருக்கும் 5…

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

இந்துராஷ்டிரம் என்ற பெயரில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை, சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட சனாதனத்தின் ஆட்சியை நிறுவத்துடிக்கும் காவி பாசிச சக்தியான பாஜக, தனது சித்தாந்தத்திலும், நடைமுறையிலும் என்றைக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் பாஜகவின் இடஒதுக்கீட்டு வெறுப்பை மட்டும் வைத்து அதனை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதுதான் தவறு.

தீட்டையும் – தீண்டாமையையும் நியாயப்படுத்தும் சனாதன இந்து மத பார்ப்பனியத்தை ஒழித்துக்கட்டுவோம்!

சனாதன தத்துவம் தான் பிறக்கும் ஒவ்வொரு உயிரையும், சாதி முத்திரைக் குத்தி பிளவுபடுத்தி தீண்டாமை - தீட்டைப் புகுத்தி, அவற்றை நியாயப்படுத்தி வருகின்றது. இந்த சனாதன இந்து மத பார்ப்பனியத்தை பரப்பி வரும் காவிகளும், இவற்றை அங்கீகரித்து வர்க்க ஒடுக்குமுறையை-ஏற்றத்தாழ்வை தீவிரப்படுத்தி வரும் கார்ப்பரேட்டுகளும், ஒரு நாணயத்தின் (பாசிசத்தின்) இரு பக்கங்கள்.

எரிவாயு விலைகுறைப்பு! வாக்குக்கு விரிக்கும் வஞ்சக வலை!

கிள்ளித்தரும் இந்த குறைப்பு அன்றாடம் ஏறிவரும் பருப்பு, கோதுமை, அரிசி, தக்காளி, வெங்காயம், காய்கறிகள் மற்றும் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் 11.5% விலையேற்றமும், GST இன் வரி உயர்வும் அள்ளிச்செல்லும் மொத்த செல்வத்தை விட இவை மிக மிக சொற்பமானது.

உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்(PLI): கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஒரு சட்டபூர்வத் திட்டம்!

கைபேசிகளின் பல்வேறு உதிரிபாகங்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் வெறுமனே அசெம்பிள் செய்வதற்கு மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு போனுக்கான விலையில் 4% செலவாகிறது என்று வைத்துக்கொண்டால் அதே போனுக்கு மோடி அரசு பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் போனுக்கான விலையில் 6% த்தை உற்பத்தி ஊக்கத்தொகையாக ஒரு போனுக்கு வழங்குகிறது.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

நாடாளுமன்றத்தில் பொய்களை பேசுகிறோமே என்று காவி பாசிஸ்டுகள் சிறிது கூட கூச்சமோ, வெட்கமோ படுவதில்லை. இவர்களின் அரை குறை உண்மைகளும், பொய்களும் நியாயம் நிறைந்தவைகளாக நாடாளுமன்றத்தில் அறிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, விவாதத்தின் மூலம் வழிநடத்தப்படுகின்றன. இதன் மூலம் கலவரத்தால் உருக்குலைந்து கிடக்கும் மணிப்பூர் மக்களை நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் மீண்டும் ஒரு முறை குற்றவாளியாக்குகின்றனர்.

வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

கடந்த எட்டு நிதியாண்டுகளில் 12.01 லட்சம் கோடி அளவிலான வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது மோடி கும்பல். இது தோராயமாக கடந்த நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கிய மொத்த தொகைக்குச் சமமாகும்.

மின்கட்டண உயர்வு:
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
பிரச்சார வெளியீடு

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி ஒரு…

மின்கட்டண உயர்வு – மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! தோழர்.முத்துக்குமார் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டம். இது குறித்து விளக்கிப் பேசுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில…